மேலும் செய்திகள்
வெள்ளி ஒரு கிலோ ரூ.10,000 அதிகரிப்பு
20 minutes ago
சென்னை: 'கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய மேம்பாட்டுக்காக, மத்திய அரசு வழங்கிய மானியத்தை வருமானமாக கருத முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தர்மபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், கடந்த 2007- - 2008ம் நிதியாண்டில், மத்திய அரசிடம் இருந்து, 3.5 கோடி ரூபாய் மானியமாக பெற்றது. இந்த தொகையை, ஒன்றியத்தின் வருமானமாக கணக்கில் எடுத்து, வருமான வரித்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து, ஒன்றியம் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது. வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, தர்மபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு: கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய மேம்பாட்டுக்காகவும், மாவட்ட கூட்டுறவு சங்கங்கள், பிற ஒன்றியங்களுக்கு வழங்க வேண்டிய கடன் தொகையை திருப்பிச் செலுத்தவும், மத்திய, மாநில அரசு சார்பில் மானியம் வழங்கப்படுகிறது. இந்த வழக்கில், சம்பந்தப்பட்ட ஒன்றியத்துக்கு 3 கோடி, 50 லட்சம் ரூபாயை, மத்திய அரசு மானியமாக வழங்கி உள்ளது. இந்த மானியத்தை வருவாயாக கருத முடியாது; இது மூலதன வரவு. இதேபோன்ற வழக்குகளில், மானியத்தை வருவாயாக கருத முடியாது; அது மூலதன வரவு என்பதை, உச்ச நீதிமன்றமும் தெளிவுபடுத்தி உள்ளது. எனவே, வருமானவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
20 minutes ago