உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நீலகிரி, கோவை, தேனி, தென்காசி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5u7rsie7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதன் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் இன்று(ஜன.,06) கனமழைக்கு வாய்ப்புள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 3 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

பெரிய ராசு
ஜன 06, 2024 21:13

தென்காசில இன்னைக்கு ஒரு சொட்டு மழை... இல்லையே உங்க கணிப்பில் தீய வைக்க


Seshan Thirumaliruncholai
ஜன 06, 2024 18:33

வரும் முன் காப்பது என்ற சிந்தாந்தம் அடியோடு போய்விட்டது. இது நமக்கும் மட்டுமல்ல அரசுக்கும் பொருந்தும். முதலில் பாதிப்பு அடைவது மக்கள். நிவாரணம் என்ற நோக்கில் பயன் அடைவது உண்மையாய் பாதிப்புஅடைந்த மக்கள் அல்ல. விழிப்புணர்வு முதலில் தேவை மக்களுக்கு. சிறு தூவானம் போட்டாலும் தண்ணீர் விடியவில்லை என்பது வெட்கக்கேடு.


அப்புசாமி
ஜன 06, 2024 15:35

எங்கே மழை பெய்யும் நு சரியா சொல்லிட்டாங்க. மழை.பெய்யலேன்னா குத்தம் சொல்லக்கூடாது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை