வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பாலில் திராவிட இனப்பற்று விட்டமின் சேர்த்து ₹100க்கு விற்கலாம். ₹1000 மாதம் எடுத்து கொள்பவர்கள் கட்டாயம் தினமும் 1லி வாங்கியே தீரவேண்டும் என உத்தரவும் வரலாம். இதையெல்லாம் மறந்து போக தமிழ்த்தாய் வாழ்த்தை மக் அடிக்கவும்
சென்னை:ஆவின் பச்சை உறை பாலின் பெயரை மாற்றி லிட்டருக்கு 11 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:'ஆவின் கிரீன் மேஜிக்' பச்சை உறை பாலில் உள்ள அதே 4.5 சதவீத கொழுப்பு சத்து கொண்ட பாலை, 'ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ்' என்ற பெயரில், திருச்சி மண்டலத்தில் ஆவின் அறிமுகம் செய்துள்ளது.கிரீன் மேஜிக் 1 லிட்டர், 44 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், கிரீன் மேஜிக் பிளஸ் 900 மி.லி., 50 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.பெயரை மாற்றி, லிட்டருக்கு 11 ரூபாய் அதிகமாக வசூலிப்பது பகல் கொள்ளை. லிட்டர் 44 ரூபாய்க்கு விற்கப்படும் கிரீன் மேஜிக் பாலை நிறுத்துவதே, ஆவினின் திட்டம் என கூறப்படுகிறது; இது வணிக அறம் அல்ல.தனியார் நிறுவனங்கள் கையாளும் அதே மோசடியை, அரசின் ஆவின் நிறுவனமும் செய்வதை ஏற்க முடியாது. லாபம் ஈட்டுவதற்காக, அநீதியான வழிமுறைகளை பின்பற்றக் கூடாது. எனவே, அதிக விலை கொண்ட ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பாலை அறிமுகம் செய்யும் திட்டத்தை, அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பச்சை உறை பாலின் விற்பனை குறைப்பு, உற்பத்தி நிறுத்தம் என்று எந்த ஒரு முடிவையும் ஆவின் எடுக்கவில்லை. மக்கள் நலன் கருதியும், எதிர்கால பால் தேவையை கருத்தில் கொண்டும், அனைவரும் விரும்பும் வகையில், வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்டு, கொழுப்பு சத்துக்களை சற்று உயர்த்தி, புதிய வகை பாலை அறிமுகம் செய்ய ஆய்வு மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட உள்ளது. எந்தவிதமான புதிய பாலின் விற்பனையையும், இதுவரை ஆவின் துவங்கவில்லை. அனைத்து ஊடகங்களுக்கும் தெரிவித்த பின்னரே, புதிய வகை பால் விற்பனை துவங்கப்படும்.-வினீத்மேலாண்மை இயக்குனர், ஆவின் நிறுவனம்
பாலில் திராவிட இனப்பற்று விட்டமின் சேர்த்து ₹100க்கு விற்கலாம். ₹1000 மாதம் எடுத்து கொள்பவர்கள் கட்டாயம் தினமும் 1லி வாங்கியே தீரவேண்டும் என உத்தரவும் வரலாம். இதையெல்லாம் மறந்து போக தமிழ்த்தாய் வாழ்த்தை மக் அடிக்கவும்