உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை நோக்கி வரும் விரைவு ரயில்கள் நிறுத்தி வைப்பு

சென்னை நோக்கி வரும் விரைவு ரயில்கள் நிறுத்தி வைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விழுப்புரம்: கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக சென்னை நோக்கி வரும் விரைவு ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சென்னை நோக்கி வந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் ஆற்றில் வெள்ளப்பபெருக்கு காரணமாக விழுப்பரம் அருகே நிறுத்தப்பட்டுள்ளதுபல்லவன், சோழன், வைகை விரைவு ரயில்கள் இன்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட வேண்டிய, சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் வரைவு ரயில், சென்னை - மதுரை இடையேயான தேஜஸ் விரைவு ரயில், சென்னை - திருச்சி சோழன் விரைவு ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.விழுப்புரம், விக்கிரவாண்டி இடையே தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியிருப்பதாலும். விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கம் ரயில்வே பாலத்தில் அபாய அளவை தாண்டி தண்ணீர் செல்வதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி