உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வந்தே பாரத் ரயிலில் மொபைல் போன் ‛டமார்: பயணிகள் ‛திக்... திக்...

வந்தே பாரத் ரயிலில் மொபைல் போன் ‛டமார்: பயணிகள் ‛திக்... திக்...

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இருந்து மைசூரு சென்ற வந்தே பாரத் ரயிலில் சார்ஜ் போட்ட மொபைல் போன் வெடித்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.சென்னையில் இருந்து மைசூரு நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் சி11 பெட்டியில் திடீரென சத்தம் கேட்டது. பயணிகள் அதிர்ச்சியடைந்து என்னவென பார்த்த போது குஷ்நாத்கர் என்பவர் சார்ஜ் போட்ட மொபைல் போன் வெடித்து புகை வந்தது தெரிந்தது. இதனையடுத்து பயணிகள் கூச்சலிட்டதால் ரயில், வாணியம்பாடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. ஊழியர்கள் சரி செய்த பிறகு, அரைமணி நேரம் தாமதமாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மைசூரு கிளம்பிச் சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Natarajan Rajarethinam
ஆக 07, 2024 10:01

அண்ணன் அமெரிக்கா வா?


Jagan (Proud Sangi)
ஆக 06, 2024 19:18

போனில் இருப்பது லித்தியம் ஐயான் பேட்டரி எளிதில் ஷார்ட் ஆகா கூடியது. மொபைல்/சார்ஜ் பேங்க் ரெண்டு மூணு தரம் கீழே போட்டால் பாட்டரி டமார் ஆகா நிறையவே வாய்ப்புள்ளது.


அப்புசாமி
ஆக 06, 2024 17:46

ரயிலில் செல்போன் வெடிக்கும். கார் ரோடில்.பாத்திக்கிட்டு தானே எரியும். எல்லாம் நம்ம வல்லரசு டெக்னாலஜி. தயாரிக்கிற கம்பெனிக்கு ஒரு அராதமும் கிடையாது. நமக்குதான் ஆப்பு


Gopu electrician
ஆக 06, 2024 16:38

cathode ray கூட Anode electrode layer touch ஆச்சினா இப்படி நடக்கும்


Senthoora
ஆக 06, 2024 15:07

இப்படி அசம்பாவிதங்களை தடுப்பதுக்காகத்தான் ஜப்பானில் ரயிலில் மொபைல் போன் பாவனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.


RAMAKRISHNAN NATESAN
ஆக 06, 2024 14:19

நல்லவேளை ...... வெடிக்கும்போது பாக்கெட்ல இல்ல ...... அடிக்கடி சார்ஜ் போட்டாலும் பரவால்ல .... 55% to 60% வரை சார்ஜ் போட்டா போதும் .....


வாய்மையே வெல்லும்
ஆக 06, 2024 13:48

வந்தேபாரத் ரயிலில் போகவேண்டும் என்றால் பிசாத்து சைனீஸ் இரண்டாம்தர மொபைல் இல்லாங்காட்டி சார்ஜ்ர் எடுத்துட்டு போனா அம்பேல் டுமீல் டமார் ஹாப்பி தீவாளி வாணவேடிக்கை தான் .. உஷாரய்யா உஷார் டமால் டமால் உஷாரு


Swaminathan L
ஆக 06, 2024 13:44

செல்போன் வெடிப்புக்குக் காரணம் வந்தே பாரத் ரயிலோ அல்லது அதில் தரப்பட்டுள்ள சார்ஜிங் வசதியோ அல்ல. நம் இரயில் பெட்டிகளில் இருக்கும் செல்ஃபோன் சார்ஜிங் வசதி 110 வோல்ட் மின்சாரம் கொண்டது. என்ன தான் ஃபோன் சார்ஜர் இந்த குறைந்த மின்சாரத்திலும் இயங்கும்படி தயாரிக்கப்பட்டாலும் சார்ஜருக்கு நம் வீடுகளில் கிடைக்கும் 230 வோல்ட் மின்சாரம் நல்லது. இரயில் பெட்டிகளில் பலர் மடிக்கணினிகளை அவற்றின் அடாப்டர்களை இந்த 110 வோல்ட் மின்சாரத்தில் பயன்படுத்துவதும் அதில் சிலருடைய அடாப்டர்கள் செயலிழந்து போவதும் நான் அறிந்த விஷயங்கள். செல்ஃபோன் பேட்டரி பழுதாகி வெடித்திருக்க வேண்டும்.


Iniyan
ஆக 06, 2024 14:16

உங்களுக்கு எலக்ட்ரிகல் தெரியவில்லை என்பது உங்கள் கருத்தில் தெரிகிறது. பரவாயில்லை. வெடிப்பது எல்லாம் சீன டுபாக்கூர்


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி