உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயில் கட்டணங்களை உயர்த்த வேண்டாம் பிரதமருக்கு முதல்வர் வேண்டுகோள்

ரயில் கட்டணங்களை உயர்த்த வேண்டாம் பிரதமருக்கு முதல்வர் வேண்டுகோள்

சென்னை:'ரயில் கட்டணங்களை உயர்த்த வேண்டாம்' என, பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:இந்திய ரயில்வே என்பது, ஏழை, நடுத்தர மக்களின் பயணங்களுக்கானது மட்டுமல்ல; அது அவர்களின் அன்றாட வாழ்வில் ஓர் அங்கம். நேற்று காட்பாடி செல்ல, ரயில் நிலையம் வந்தபோது, என்னை அன்போடு வரவேற்ற மக்களிடம் பேசினேன். வழக்கமான உற்சாகமும், மகிழ்ச்சியும் குறைந்திருந்தது. ஜூலை முதல் உயர்த்தப்பட உள்ள ரயில் கட்டணங்களும், குறைந்து வரும் சாதாரண வகுப்பு பெட்டிகளும், அவர்களின் மகிழ்ச்சியை களவாடி உள்ளது.பிரதமர் மோடி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர், 'ஏசி' பெட்டிகளை உயர்த்த வேண்டும் என, சாதாரண வகுப்பு பெட்டிகளை குறைக்க வேண்டாம். ரயில் கட்டணங்களையும் உயர்த்த வேண்டாம். ஏற்கனவே விலைவாசி உயர்வு முதல் சிலிண்டர் விலை உயர்வு வரை, நம் நடுத்தரக் குடும்பங்கள் அல்லற்பட்டு கொண்டிருக்கின்றனர். அவர்கள் கவலையை மேலும் அதிகரித்திட வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை