உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவை குண்டு வெடிப்பு: ஆவணங்கள் ஒப்படைப்பு

கோவை குண்டு வெடிப்பு: ஆவணங்கள் ஒப்படைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சிக்கிய, 25 மொபைல் போன் உள்ளிட்ட ஆவணங்களை சிறப்பு நீதிமன்றத்தில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஒப்படைத்தனர்.கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், 2022 அக்., 23ல் கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதற்கு மூளையாக செயல்பட்ட, அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின், 28, பலியானார்.இச்சம்பவம் குறித்து, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது, ஜமேஷா முபின், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததும், அவரது தலைமையில் மிகப்பெரிய கும்பல் செயல்பட்டதும் தெரியவந்தது.இதுதொடர்பாக, கடந்த 10ம் தேதி, சென்னை, திருநெல்வேலி, மதுரை என, அரபிக் கல்லுாரிகள் உட்பட, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள், வீடுகள், அலுவலகங்கள் என, 21 இடங்களில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.அப்போது, 25 மொபைல் போன்கள், 34 சிம்கார்டுகள், மூன்று ஹார்ட் டிஸ்க்குகள் உள்ளிட்ட 'டிஜிட்டல்' ஆவணங்களை கைப்பற்றினர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்த சையது அப்துல் ரகுமான் உமரி, 52, கோவை பொன்விழா நகரை சேர்ந்த முகமது உசேன் பைசி, 38, குனியமுத்துாரை சேர்ந்த இர்ஷாத், 22, மற்றும் ஜமீல் பாஷா உமரி, 30, ஆகியோரை கைது செய்தனர்.அவர்களிடமும் சிக்கிய, மொபைல் போன்கள் உள்ளிட்ட 'டிஜிட்டல்' ஆவணங்களை, சென்னை பூந்தமல்லியில் உள்ள, சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று ஒப்படைத்தனர். கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக, ஏற்கனவே, 14 பேர் கைதாகி சிறைகளில் அடைக்கப் பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Xavier,Tuticorin
பிப் 16, 2024 17:10

மற்ற செய்திகளுக்கு எல்லாம் வரிசை கட்டி வந்து ஒப்பாரி வைத்து கதறுவானுக அமைதீஸ்கள். ஆனால் இது பற்றி கருத்தை போட இந்து பெயரில் போலியாக சுற்றித் திரியும் எந்த ஒரு மூர்க்கனும் வர மாட்டானுக.


வெகுளி
பிப் 16, 2024 15:38

கோவை உக்கடம் பகுதி அண்ணாமலை ஆட்சியில் சுத்தப்படுத்தப்பட வேண்டும்....


rsudarsan lic
பிப் 16, 2024 14:31

To dismiss TN GOVT, Centre seems to be counting 1 to 108. Aglesst the centre can call for explanation from TN government


Suppan
பிப் 16, 2024 16:48

விடியலார் சிறையில் உள்ள கோவை தொடர் குண்டு வெடிப்பில் தண்டனை பெற்ற பயங்கரவாதிகளை (தலைவன் பாஷா உட்பட) விடுதலை செய்துவிட்டாரே. பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப அங்கத்தினர்களின் வயிற்றிச்சலை விட 'சிறுபான்மையினரின்" ஒட்டு முக்கியம். கோவை வாசிகள் தேர்தலில் எதிர்வினை ஆற்றுவார்களா? இல்லை பணம் வாங்கிக்கொண்டு அந்த திருட்டு திமுகவுக்கே ஒட்டு போடுவார்களா?


Suppan
பிப் 16, 2024 16:52

விடியல் அரசு இந்த பயங்கரவாதிகளுக்கு தமிழகத்திரு, தமிழகத்திலகம், ராம் சாமி வைரம் , கருணா பிளாட்டினம் என்றெல்லாம் பட்டம் கொடுத்தாலும் கொடுப்பார்கள். ஒட்டுதான் முக்கியம். மக்கள் எக்கேடு கேட்டால் என்ன?


duruvasar
பிப் 16, 2024 12:04

தந்தை வழியில் தனயனும் நடித்திருக்கிறார். இது பகுத்தறிவு மண்.


NicoleThomson
பிப் 16, 2024 12:03

இது போன்ற குற்றங்களுக்கு மதம் பார்க்காமல் கடுமையான தண்டனை வழங்க ஆட்சியில் இருப்பவர்களும் முன்வரவேண்டும் .


Sathyasekaren Sathyanarayanana
பிப் 16, 2024 08:37

முட்டாள் ஹிந்துக்களுக்கு எவ்வளவு பட்டாலும் உரைக்காது, படிக்காதவன், மறுபடியும் ஆயிரம் ரூபாய்க்கு, ஒரு குவார்ட்டருக்கு பல்லை இழித்து கொண்டு திருட்டு திராவிட கழிசடைகளுக்கே வோட்டை போடுவார்கள் . படித்தவன் போலி மதசார்பின்மை பேசிக்கொண்டு திருடர்களுக்கும் கான் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கழிசடைகளுக்கு வோட்டை போடுவான். திருந்தாத ஜென்மங்கள்.


பேசும் தமிழன்
பிப் 16, 2024 08:16

விடியல் ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதற்கு இந்த குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்றே போதும்..... அந்தளவுக்கு சீர்குலைந்து விட்டது.... தீவிரவாதிகளின் கூடாரமாக மாறி விட்டது.


karupanasamy
பிப் 16, 2024 08:11

ஒரு பத்திரிகைகார பயபுள்ள ஸ்டாலினையோ அல்லது கனிமொழியையோ அல்லது திமுக அமைச்சர்களையோ சிலிண்டர் வெடிப்பா என்று ஏன் கேள்வி கேட்க மாட்டேங்குறாங்க?


Ramesh Sargam
பிப் 16, 2024 07:35

குண்டுவெப்பு போன்ற நாட்டின் அமைதியை குலைக்கும் வழக்குகள் துரிதகதியில் விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். காலம் தாழ்த்த தாழ்த்த ஆதாரங்கள் அழிக்கப்பட்டுவிடும். பிறகு குற்றவாளிகளை தண்டிக்கவே முடியாது.


ராஜா
பிப் 16, 2024 07:00

இவர்கள் வழக்கின் பின்னணி பாகிஸ்தானை நினைவுபடுத்துகிறது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை