உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விரைவில் கான்கிரீட் வீடு அமைச்சர் பெரியசாமி உறுதி

விரைவில் கான்கிரீட் வீடு அமைச்சர் பெரியசாமி உறுதி

சென்னை: நாகை மாவட்டத்தில், வீடு கட்டும் திட்ட செயல்பாடு தொடர்பாக, கவர்னர் வெளியிட்ட கருத்துக்களுக்கு, அமைச்சர் பெரியசாமி வெளியிட்ட பதில் அறிக்கை:நாகை மாவட்டம், வெண்மணி ஊராட்சியில், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தின் கீழ், 127 பயனாளிகளுக்கு, வீடு கட்ட அனுமதி வழங்கப்பட்டது. இதுவரை, 75 பேர் கட்டி முடித்துள்ளனர்; 52 பேர் கட்டி வருகின்றனர்.மாவட்டத்திற்கு, மத்திய அரசால், 31,051 வீடுகள் மட்டும் வழங்கப்பட்டன; 23,110 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதி வீடுகள் கட்டும் பணி நடக்கிறது.பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தின் கீழ், மத்திய அரசால் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்படுகிறது. தகுதி வாய்ந்த பயனாளிகள் இல்லாத ஊராட்சிகளில் இருந்து, தகுதி வாய்ந்த பயனாளிகள் அதிகம் உள்ள ஊராட்சிகளுக்கு, வீடுகளை மாற்றி வழங்க, மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை.இதுபோன்ற காரணத்தால், வெண்மணி போன்ற ஊராட்சிகளுக்கு, இத்திட்டத்தின் கீழ் தேவைக்கேற்ப வீடுகள் வழங்க இயலவில்லை.தற்போது தமிழக அரசால் குடிசை வீடுகளுக்காக நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், நாகை மாவட்டம், கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெண்மணி ஊராட்சியில், 66 குடிசை வீடுகள் தகுதி வாய்ந்தவையாக கண்டறியப்பட்டுள்ளன.இந்த வீடுகள், தமிழக அரசின் ஊரக குடியிருப்பு திட்டம் வழியே, கான்கிரீட் வீடுகளாக இனி வரும் காலங்களில் மாற்றப்படும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ