உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காங்., நிர்வாகி கைது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காங்., நிர்வாகி கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான காங்கிரஸ் நிர்வாகி அஸ்வத்தாமனை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5ம் தேதி மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு மற்றும் சில கட்சிகளின் நிர்வாகிகள் உட்பட 21 பேரை போலீசார் கைது செய்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pznd6ihu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இச்சம்பவத்தில் சிறையில் இருக்கும் ரவுடியான நாகேந்திரனின் மகனும், இளைஞர் காங்., முதன்மை பொதுச்செயலாளர் ஆக இருந்த வழக்கறிஞர் அஸ்வத்தாமன் என்பவரை விசாரணைக்கு பிறகு போலீசார் கைது செய்தனர். ஆம்ஸ்டிராங் இறந்த 16வது நாளில் நினைவேந்தல் போஸ்டரை அஸ்வத்தாமன் ஒட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அஸ்வத்தாமனை கட்சியில் இருந்து நீக்கி மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் உத்தரவிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

அஜய் சென்னை இந்தியன்
ஆக 08, 2024 00:17

திமுக வில் மூத்த அமைச்சர் மீது கூட சிலர் சந்தேகம் தெரிவித்தனர். ஆனால் இன்னும் அவரை விசாரிதார்க்களா என்று தெரிய வில்லை. ஆனால் பரவில்லை....ஒருவரை கொலை செய்ய இத்தனை பெருமுயற்சி செய்தார் என்று யோசிக்கும் போது தலை சுற்றுகிறது. இங்கு ஆம்ஸ்ட்ராங் பாராட்ட பட வேண்டும். இருந்தாலும் கணக்கில் அடங்கா எதிரிகளை சம்பாதித்து வைத்து உள்ளது....வருத்த பட வேண்டிய விசயம்.


Jagan (Proud Sangi)
ஆக 07, 2024 18:38

நாலு முற்படுத்தப்பட்ட சமூகத்தினரையும் விவகாரத்தில் சம்மந்தம் இல்லை என்றாலும் கோர்த்து விட வேண்டியது தான். சமூக நீதி மிக முக்கியம் அமைச்சரே


Jagan (Proud Sangi)
ஆக 07, 2024 18:36

எல்லா கட்சி காரனையும் இழுத்து விட வேண்டியது தான். விவகாரம் நீர்த்து போக இதுவும் ஒரு ட்ரிக்ஸ்


Anand
ஆக 07, 2024 13:53

அடுத்து, ஆமைக்கறி, பொய்கோ, குருமா, உண்டியல் குலுக்கிஸ் கட்சிகளின் நிர்வாகிகளும் வரிசையில் நிற்கிறார்களா?


Tamil Inban
ஆக 07, 2024 12:55

இவன் தம்பி பாஜக நிர்வாகி என்பதை மறந்துவிடாதீர்கள்.


Barakat Ali
ஆக 07, 2024 12:51

ஆம்ஸ்டிராங் வளர்ந்துவிடக்கூடாது ன்னு நினைச்சு மத்த கட்சிங்க போட்டுட்டாங்க .....


கோபால கிருஷ்ணன்
ஆக 07, 2024 12:50

எல்லாக் கட்சியில் இருப்பவர்களுக்கும் ஒரு பொது எதிரி இருக்கிறான் என்றால்.....உண்மையில் அவன் நேர்மையானவன் ஆகத்தான் இருக்க முடியும்.....!!!


Narasimhan
ஆக 07, 2024 12:42

ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிதான் பேலன்ஸ் போல


VENKATASUBRAMANIAN
ஆக 07, 2024 12:30

இதுதான் சமூகநீதி


ஆரூர் ரங்
ஆக 07, 2024 12:11

சிறையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தலாமே.


பிரேம்ஜி
ஆக 07, 2024 12:40

சூப்பர்!


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி