உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமர் கோவில் கும்பாபிஷேகம்: காங்., புறக்கணிப்பு

ராமர் கோவில் கும்பாபிஷேகம்: காங்., புறக்கணிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தேர்தல் லாபத்திற்காக, ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., ஆன்மிக அரசியல் செய்வதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா, மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் குற்றஞ்சாட்டி உள்ளனர். இதை தொடர்ந்து, விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளனர்.உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட ராமர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் குழந்தை ராமர் சிலையை கருவறையில் பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு வரும் 22ல் நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் உட்பட 6,000க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=znape2nb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நாடு முழுதும் இருந்து, 4,000 துறவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. சர்வதேச நாடுகளில் இருந்து 50 பேர் விருந்தினர்களாக அழைக்கப்பட்டு உள்ளனர்.

அழைப்பிதழ்

இந்த விழா தொடர்பாக, பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் நாடு தழுவிய தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். கும்பாபிஷேகத்துக்கு பின், நாட்டு மக்கள் ராமர் கோவிலுக்கு வருகை புரிய அவர்கள் அழைப்பு விடுத்து வருகின்றனர்.ராமர் கோவில் மற்றும் அதன் சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரசாரத்தை, வரும் 14 முதல் மேற்கொள்ள, மாநில பா.ஜ.,வினருக்கு தலைமை உத்தரவிட்டு உள்ளது. கும்பாபிஷேக நாளில், அந்தந்த மாநிலங்களில் உள்ள கோவில்களில் மக்கள் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்துக்கு பின், கோவிலுக்கு வருகை தர விரும்புவோரை அழைத்து வர, மாநில நிர்வாகிகள் உதவ வேண்டும் என்றும் பா.ஜ., தலைமை உத்தரவிட்டுள்ளது. கும்பாபிஷேகத்தில் பங்கேற்க, கட்சி பாகுபாடின்றி அனைவருக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த காங்., அமைச்சரும், முன்னாள் முதல்வரின் மகனுமான விக்ரமாதித்ய சிங் மற்றும் மாநில காங்., தலைவர் பிரதிபா சிங் கும்பாபிஷேகத்தில் பங்கேற்கப் போவதாக சமீபத்தில் அறிவித்தனர். உ.பி., - காங்., தலைவர் அஜய் ராய், மாநில பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே உட்பட 100க்கும் மேற்பட்ட காங்., நிர்வாகிகள் வரும் 15ம் தேதி அயோத்திக்கு வருகை தர உள்ளனர்.அங்குள்ள சரயு நதியில் நீராடிய பின், ராமர் கோவில் மற்றும் அனுமன்காரி கோவில்களில் அவர்கள் வழிபட உள்ளனர். காங்., தேசிய தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, காங்., பார்லிமென்ட் குழு தலைவர் சோனியா, லோக்சபா காங்., தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோருக்கு, ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கான அழைப்பிதழ் கடந்த மாதம் அனுப்பி வைக்கப்பட்டது.

நிராகரிப்பு

நிகழ்வில் பங்கேற்பது தொடர்பான தங்கள் முடிவை அவர்கள் நேற்று அறிவித்தனர். இது குறித்து, காங்., பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:நாட்டின் கோடிக்கணக்கான மக்கள் ராமரை வழிபடுகின்றனர். மதம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம். ஆனால், ராமர் கோவில் விவகாரத்தில், பா.ஜ.,வும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும் நீண்ட காலமாக அரசியல் செய்து வருகின்றன.இன்னும் முழுமையாக கட்டி முடிக்கப்படாத ராமர் கோவிலை, தேர்தல் லாபத்திற்காக பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அவசரமாக திறக்கின்றன; முழுக்க முழுக்க பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., நிகழ்வாகவே நடக்க உள்ளது. எனவே, 2019ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்டு, ராமரை வணங்கும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த விழாவில் பங்கேற்பதற்கான அழைப்பை, மல்லிகார்ஜுன கார்கே, சோனியா ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் மரியாதையுடன் நிராகரித்துள்ளனர்.இந்த விழாவில் அவர்கள் பங்கேற்க மாட்டார்.இவ்வாறு அவர் கூறினார்.

காங்., மீது பா.ஜ., தலைவர்கள் பாய்ச்சல்

காங்., தலைவர்களின் இந்த முடிவு குறித்து, பா.ஜ., - எம்.பி., மனோஜ் திவாரி மற்றும் பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் நளின் கோஹ்லி கூறியதாவது: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இதுவரை எந்த முயற்சியுமே எடுக்காத காங்., தலைவர்கள், கும்பாபிஷேகத்தில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளதில் ஆச்சரியம் எதுவுமில்லை. 'ராமர் வாழ்ந்தார் என்பதே வெறும் கற்பனை' என, உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தனர். இந்த விவகாரத்தில் விரைவில் தீர்வு கிடைக்கக் கூடாது என நம்பினர். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படக் கூடாது என விரும்பியவர்கள் எப்படி அந்த நிகழ்வில் பங்கேற்பர்? இது, அக்கட்சியின் சிந்தனைக்கு பொருந்தாது. ராமர் மீது பற்று இருந்தால் அவர்கள் விழாவில் நிச்சயம் பங்கேற்று இருப்பர்; கோடிக்கணக்கான இந்திய மக்களின் உற்சாகத்தில் பங்கேற்று இருப்பர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், ராம ராஜ்யம் நடந்த, 'த்ரேதா யுகம்' மீண்டும் திரும்பி உள்ளது. த்ரேதா யுகத்தில் ராவணன் செய்த தவறை போல, கும்பாபிஷேகத்தை புறக்கணிப்போர் அதற்காக தங்கள் வாழ்நாள் முழுதும் வருந்துவர். தேர்தல் லாபத்திற்காக பா.ஜ., இதை செய்கிறது என்றால், அதே தேர்தல் லாபத்திற்காக காங்.,கும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஹிந்தியிலோ, இத்தாலி மொழியிலோ பஜனை பாடல்களை பாடலாம். சோனியாவை யார் தடுக்கப் போவது? இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ