உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்தல் அறிக்கை குறித்து 25ல் காங். கருத்து கேட்பு

தேர்தல் அறிக்கை குறித்து 25ல் காங். கருத்து கேட்பு

சென்னை:'காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு சார்பில், பொதுமக்கள், பல்வேறு அமைப்புகளிடம் கருத்து கேட்பு கூட்டம், வரும் 25ம் தேதி சென்னையில் நடக்கவுள்ளது' என, தமிழக காங். தலைவர் அழகிரி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:ஜனநாயகத்தில் ஆட்சிக்கு வர, வாக்குறுதிகள், பரிந்துரைகளை தெளிவாக வெளிப்படுத்தும் தேர்தல் அறிக்கை மிக முக்கிய ஆவணம். கடந்த தேர்தல்களில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மகத்தான சாதனைகளை புரிந்தது. வரும் லோக்சபா தேர்தலில் தேர்தலுக்கான அறிக்கை தயாரிக்க, வரும், 25ம் தேதி சென்னை காமராஜர் அரங்கில், பொதுமக்களிடமும்,பல்வேறு அமைப்புகளிடமும் கருத்துக்களை கேட்கும் கூட்டம் நடக்கிறது.அதில், கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவர் சிதம்பரம், தொழில் வல்லுநர்கள் பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் பங்கேற்கின்றனர். அக்கூட்டத்தில், காங்., தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை, எழுத்துப்பூர்வமாக பொதுமக்களும், பல்வேறு அமைப்புகளும் வழங்கலாம்.இவ்வாறு அழகிரி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை