உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தனியார் பஸ்ஸில் வாழப்பாடி பயணிகளுக்கு தொடரும் அவமரியாதை;அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தனியார் பஸ்ஸில் வாழப்பாடி பயணிகளுக்கு தொடரும் அவமரியாதை;அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வாழப்பாடி:தனியார் பஸ்ஸில் வாழப்பாடி பயணிகளுக்கு தொடர்ந்து அவமரியாதை ஏற்பட்டு வருவதால், தனியார் பஸ்சை முற்றுகையிட்டு வாழப்பாடி பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம், கருமந்துறை, அருநூற்றுமலை, தம்மம்பட்டி, மங்களபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார 50க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு, போக்குவரத்து, கல்வி, மருத்துவம், தொழில் உள்ளிட்டவற்றிற்கு வாழப்பாடி மையமாக உள்ளது. இந்நிலையில் வாழப்பாடிக்குள் புறவழிச் சாலையில் செல்லாமல், தேசிய நெடுஞ்சாலையிலேயே வாழப்பாடியில் நிற்காமல் சில அரசு மற்றும் தனியார் பஸ்கள் செல்கின்றன. அதேபோல், சேலம் பஸ் ஸ்டாண்டில் ஆத்தூர் நோக்கி செல்லும் தனியார் பஸ்ஸில், வாழப்பாடி பயணிகள் ஏறினாலும், ஆத்தூர் பஸ் ஸ்டாண்டில், சேலம் நோக்கி செல்லும் தனியார் பஸ்ஸில் வாழப்பாடி பயணிகள் ஏறினாலும், தனியார் பஸ் கண்டக்டர்கள் வாழப்பாடி பயணிகள் ஏறக்கூடாது, வாழப்பாடி பயணிகள் சீட்டில் அமரக்கூடாது என அவமரியாதையாக தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், நேற்று ஆத்தூர் பஸ் ஸ்டாண்டில், வாழப்பாடி பயணிகள் பஸ்ஸில் ஏறக்கூடாது, சீட்டில் அமரக்கூடாது என தனியார் பஸ் கண்டக்டர் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த, வாழப்பாடி பயணிகள் நேற்று மாலை 5.10 மணி அளவில் வாழப்பாடி பஸ் ஸ்டாண்டில், வாழப்பாடி பயணிகளை அவமரியாதை செய்த தனியார் பஸ் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தனியார் பஸ்சை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் அப்பகுதிக்கு சென்று, பயணிகளை சமாதானம் செய்து அனுப்பினர். தொடர்ந்து, இதுபோன்று தனியார் மற்றும் அரசு பஸ்கள் வாழப்பாடிக்குள் புறவழிச்சாலையில் செல்லாமல், தேசிய நெடுஞ்சாலையில் செல்வதாகவும் , வாழப்பாடி பயணிகளை தனியார் பஸ் கண்டக்டர்கள் அவமரியாதை செய்வதாகவும், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வாழப்பாடி பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.வாழப்பாடி பயணிகளை அவமரியாதை செய்யும் தனியார் பஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி