உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொடரும் துப்பாக்கிச்சூடு; திண்டுக்கல்லில் தப்பியோடிய ரவுடியை சுட்டுபிடித்த போலீசார்

தொடரும் துப்பாக்கிச்சூடு; திண்டுக்கல்லில் தப்பியோடிய ரவுடியை சுட்டுபிடித்த போலீசார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.கடந்த 15 நாட்களில் 3 என்கவுன்டர் சம்பவம் நடந்தது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டர் செய்யப்பட்டார்.மேலும், கேரளாவில் ஏ.டி.எம்.,களில் கொள்ளையடித்து விட்டு, கண்டெய்னர் லாரியில் வந்த வடமாநில கும்பலைச் சேர்ந்த கொள்ளையனை நாமக்கல் போலீசார் என்கவுன்டர் செய்தனர். இப்படி, தமிழகத்தில் அடுத்தடுத்து என்கவுன்டர் சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நீதிமன்றமே, அதிருப்தியை தெரிவித்திருந்தது. இந்த நிலையில், திண்டுக்கல் அருகே கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி ரிச்சர்ட் சச்சின் என்பவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். பஸ் ஸ்டாண்ட் அருகே இர்பான் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆயுதங்களைப் பதுக்கி வைத்த இடத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்ற போது, போலீஸ்காரர் அருணை ரிச்சர்ட் சச்சின் தாக்கியதாக சொல்லப்படுகிறது. பின்னர், அங்கிருந்து தப்பியோட முயன்றதாகவும், அவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ரிச்சர்ட் சச்சின் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல, ரவுடி தாக்கியதில் காயமடைந்த போலீஸ்காரர் அருணும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Ramesh Sargam
அக் 04, 2024 12:05

ரவுடிகளை கூண்டோடு ஒழிப்போம் என்று கூறிய முதல்வரே, நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் இப்பொழுது. இதுபோன்ற செய்திகள் உங்கள் கவனத்திற்கு எட்டவில்லையா? ரவுடிகளை கட்டுப்படுத்த முடியவில்லையா? அதெப்படி முடியும்? ரவுடிகளை உருவாக்குவதே உங்கள் கட்சிதானே ..... பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஒழிக்கமுடியாது. அதுபோல, திமுக ஆட்சியில் இருக்கும்வரை ரவுடிகளை ஒழிக்கமுடியாது.


sankar
அக் 04, 2024 11:11

ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்கா என்ன - திடீரென்று ஏன் இப்படி வாரம் இருமுறை நடக்கிறது - எதையோ பிளான் போட்டு புத்திசாலித்தனமாக இந்த அரசு அரங்கேற்றுவதாக தெரிகிறது


Srinivasan Krishnamoorthi
அக் 04, 2024 10:56

அநீதிக்கு எதிரான போலீஸ் செயல்பாடுகள் நீதிமன்றத்திற்கு அதிருப்தி ஏற்படுத்துவது வருந்தத்தக்கது. இனி போலீஸ் என்கவுன்டர் செய்ய யோசிப்பார்கள்


raja
அக் 04, 2024 10:51

ஒன்னு மட்டும் புரியுது மக்க இந்த கேடுகெட்ட விடியல் ஒன்கோல் தெலுங்கன் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலவுக்கு காரணம் கிரிப்டோகளும் மார்கத்தினரும் தான் சத்தியமா இந்துகள் என்கிற சனாதானிகளால் இல்லை....


S Sivakumar
அக் 04, 2024 10:36

இந்த மாதிரியான நடவடிக்கைகள் சாதாரண மக்கள் போல நடமாடும் ஊழலில் திளையும் அனைவருக்கும் தேவை என்கொண்டர்.


Shekar
அக் 04, 2024 10:02

ஒரு வகையில் இந்த நிகழ்வுகள் சிறப்பானவை, ஆனால் இது குற்றம் செய்யும் குடும்ப கொத்தடிமைகளுக்கு நடக்கிறதா என்ற சந்தேகமும் வருகிறது, அது சரி நம்ம சைக்கிள் பாபு ஏன் இதை செய்யவில்லை?


அஸ்வின்
அக் 04, 2024 09:04

தொடர்க


Indian
அக் 04, 2024 08:48

சரியான நடவடிக்கை ,


Lion Drsekar
அக் 04, 2024 08:31

ஒரு விதத்தில் பாராட்டுக்கள் அதே நேரத்தில் இவர் சீக்கிரம் குணமடைந்து வெளியே வந்து மீண்டும் அவரது குலத்தொழிலை சீரும் சிறப்புமாக செய்ய எல்லாம் வல்ல .. வேண்டுகிறேன், எதிர்காலத்தில் பொது அறிவு என்ற பெயரில் எதிர்காலத்தில் அரசு தேர்வு எழுதும் மாணவர்கள் இவர்களது சாதனைகளையும் எழுதவேண்டிய காலம் வரும், இப்போது ஒரு அமைப்பின் கீழ் செயல்படும் இயக்கங்கள் இதைத்தான் செய்கின்றன , ஆனால் அவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கிறது , ஆகவே இவர்களது பெயர்களை நினைவில் கொள்ளவேண்டும், உச்சரிக்கவேண்டும் , அதே போன்று நாளை காலங்கள் போல் தோன்றும் தீய சக்திகளின் அமைப்புகளுக்கும் அங்கீகாரம் கிடைக்கும் , பாராட்டுக்கள்,


Rajan
அக் 04, 2024 08:10

இது நல்ல மனித உரிமை. கொலை, கொள்ளை மற்ற தீ செயல் செய்பவனுக்கு பாதுகாப்பு, பிடிக்க போகும் போலீசார் சுட்டு பிடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தால் அத்துமீறல். இவனுங்களுக்கு கோர்ட், வக்கீல், சிறை செலவு எல்லாம் மக்கள் பணம். சட்டம் ஒழுங்கு நன்றாக இருப்பதற்கு போலீஸ், சட்டம் மீது பயம் வரவேண்டும். டாணாக்காரர் வருகிறார் என்றாலே குழந்தையும் வாய் மூடியதே பொற்காலம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை