உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒப்பந்த ஓட்டுனர், நடத்துனர்; தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

ஒப்பந்த ஓட்டுனர், நடத்துனர்; தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: போக்குவரத்து கழகங்களில், தனியார் நிறுவனம் வாயிலாக, ஓட்டுனர், நடத்துனர் நியமனம் செய்வதற்கு, தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.அரசு போக்குவரத்து கழகங்களில், ஒட்டுனர்கள், நடத்துனர்கள் பணியிடங்கள், 20 சதவீதம் காலியாக உள்ளன. இதனால், தனியார் ஓட்டுனர், நடத்துனர்களை நியமித்து, பஸ்களை சீராக இயக்க, அரசு போக்குவரத்து கழகங்கள் முடிவு செய்து, அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்கு, தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தின. இது, தற்காலிகமாக நடவடிக்கை என, நிர்வாகம் சமாளித்தது.இந்நிலையில், திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், ஓட்டுனர், நடத்துனர் பணிக்கு ஆட்களை அனுப்பும் பணிக்கு, தனியார் நிறுவனங்களை அனுமதி வழங்கும் வகையில், விளம்பர அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இதை கண்டித்து, தொழிற்சங்கங்கள் மீண்டும் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளன.இதுகுறித்து, சி.ஐ.டி.யு., பொதுச்செயலர் ஆறுமுக நயினார் கூறியதாவது: நிரந்தர தன்மையுள்ள வேலைகளில் ஒப்பந்த தொழிலாளர் நியமனம் கூடாது என்ற சட்டம் இருக்கக்கூடாது. காலியிடங்களில் தனியார் நிறுவனம் வாயிலாக, பணியாளர் நியமனம் செய்வது, சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கை. சமூக நீதியை பேசிவிட்டு, காலி பணியிடங்களை நிரப்பாமல், தனியார் நிறுவனம் வாயிலாக, பணியாளர்களை நியமனம் செய்வது சரியல்ல. இதை கண்டித்து, போராட்டங்களை நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.ஏ.ஐ.டி.யு.சி., பொதுச்செயலர் ஆறுமுகம் கூறியதாவது: திருநெல்வேலி போக்குவரத்து கழகத்தில், ஓட்டுனர், நடத்துனராக, 365 நாட்களுக்கு மட்டும் பணிபுரிய, ஆட்களை அனுப்பும் தனியார் நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்து டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஒப்பந்த முறை வாயிலாக ஓட்டுனர், நடத்துனர் பணி நியமனம் செய்தால், ஒப்பந்ததாரர்கள் லாபம் பெறவும், முறைகேடு நடக்கவும் வாய்ப்பளிக்கும். எனவே, ஒப்பந்த முறை வாயிலாக, பணி நியமனம் செய்வதை கைவிட்டு, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கும் இளைஞர்களை, நேரடி நியமனம் வாயிலாக பணிக்கு அமர்த்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ms Mahadevan Mahadevan
ஜூன் 21, 2024 12:57

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் பணியாளர்கள் நியமிக்க படவெண்டும். தொகுப்பு உதியம் இ எஸ் ஐ . இ பி எப் போன்ற உரிமைகள் தரப்படவேண்டும் இ பி எஸ் பென்சன் வேண்டும்


duruvasar
ஜூன் 20, 2024 12:29

என்ன தோலர்களே சவுண்டு ஓவரா தெரியுது. 2026 தேர்தலுக்கு 25+20 வேணாமா ? சவுண்ட கொறைங்க.


தமிழ்வேள்
ஜூன் 20, 2024 11:12

ஒப்பந்த முறையில் உள்ள கோளாறு : அரசிடம் ஒரு ஆளுக்கு வாங்கும் காசில் பாதிகூட தருவதில்லை ...ஒரு ஆளின் சம்பளத்தில் பாதிக்கு மேல் இந்த திருட்டு அவுட் சோர்சிங் கம்பெனி கொள்ளையடிக்கிறது .....[அந்த கம்பெனிகள் ஆளுங்கட்சி புள்ளிகளுடையது என்பது வேறு விஷயம் ]


mindum vasantham
ஜூன் 20, 2024 08:58

ஒப்பந்தம் முறையில் முதல்வரை நியமிக்கலாம்


vijay
ஜூன் 20, 2024 11:30

ஆனால், திராவிட மாடலின்படி முதல்வர் முதன்மையானவர், அதனால் அடுத்த இருவது ஆண்டுகளுக்கு முதல்வர் அன்று ஒப்பந்தம் போட்டுவிடுவார்கள், பரவாயில்லையா சார்??


Rajarajan
ஜூன் 20, 2024 08:53

இப்போமட்டும் என்ன வாழுதாம்?? ஊழல், போராட்டம், வேலைக்கே வர்றதில்லை, சந்தா வசூலிப்பு, உடைசல் பேருந்து, விபத்து தானே?? தனியார்னா போட்டி இருக்கும். ஆனா பராமரிப்பும் இருக்கும். நேர அட்டவணை, பெர்மிட், டிக்கெட் கட்டண நிர்ணயம், இவை மட்டும் அரசு செய்தால் போதும். மேலும், நகர பேருந்துகளை மற்றும் வெளியூர் பேருந்துகளை பாதி மட்டும் அரசு வைத்திருந்தால் போதும். மாணவர் சலுகை கட்டணத்தை, அரசே தனியாருக்கு செலுத்தலாம்.


ديفيد رافائيل
ஜூன் 20, 2024 08:28

எப்படியாவது TNSTC ல வேலை கிடைக்காதா எத்தனை பேர் எதிர்பார்த்து இருக்காங்க. தொழிற்சங்கத்துல இருக்குறவனுக பிரச்சினை பண்ணனும்னு பண்ணுவாங்க போல.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை