உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுக ஆட்சியில் தலை விரித்தாடும் ஊழல்: ஆடிட்டர் குருமூர்த்தி குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் தலை விரித்தாடும் ஊழல்: ஆடிட்டர் குருமூர்த்தி குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: '' தி.மு.க., வந்தது முதல் தமிழகத்தில் அரசியல் கலாசாரமே மாறி விட்டது. அக்கட்சியில், தரம் தாழ்ந்த பேச்சாளர்கள் உள்ளனர். அவர்களது ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது,'' என ஆடிட்டர் குருமூர்த்தி பேசினார்.கோவையில் நடந்த இந்தியா டுடே கருத்தரங்கில், 'துக்ளக்' ஆசிரியர் குருமூர்த்தி கூறியதாவது:திராவிடத்துக்கு எந்தவொரு மொழியும் கிடையாது. தி.மு.க.,வினர் திராவிடம், தமிழ் குறித்து பேசுகின்றனர். இவ்விரண்டுக்குமே தி.மு.க.,வினர் உண்மையாக இல்லை. தி.மு.க., தமிழை அழிக்க நினைக்கிறது; இதுவரை தமிழுக்காக எதுவும் செய்யவில்லை.தி.மு.க., வந்தது முதல் தமிழகத்தில் அரசியல் கலாசாரமே மாறி விட்டது. அக்கட்சியில், தரம் தாழ்ந்த பேச்சாளர்கள் உள்ளனர். அவர்களது ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. காங்., ஆட்சிக்கு முன்பிருந்த இந்தியாவில் இருந்த தேசியத்தை மீட்டெடுத்தது பா.ஜ., காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தும் அதை செய்யவில்லை. தி.மு.க.,வுக்கு தேசியத்தின் மீது நம்பிக்கை இல்லை. ஹிந்தி, ஹிந்து, ஹிந்துஸ்தான் ஆகிய மூன்றையும் முன்னெடுப்பதே பா.ஜ.,வின் உண்மையான நோக்கம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

V RAMASWAMY
செப் 09, 2025 09:24

மறைந்த திரு சோ அவர்கள் சொல்லாததா? அப்பொழுதே மக்களும் அதிகாரிகளும் விழிப்புடனிருந்திருந்தால் இந்த அளவுக்கு இந்தக் கொடுமைகள் வளர்த்திருக்காது. இனியாவது 2026ல் அறிவுபூர்வமாக செயல்படுங்கள், காசை வாங்கிக்கொண்டு மூளையை அடகு வைக்காதீர்கள்.


AMMAN EARTH MOVERS
செப் 09, 2025 09:19

இவரு பேச்சை கேட்டால் நடுத்தெருவுளதான் நிக்கணும் முதலில் OPS இப்போ செங்கோட்டையன்


N Srinivasan
செப் 09, 2025 09:09

பிஜேபி கூட்டம் சொல்லிகிட்டே இருங்க ஒரு பிரயோஜனமும் இல்லை ஒரு வழக்கு கைது எதுவும் கிடையாது எந்த ஒரு வழக்காவது முடிந்து கைது பண்ணி சிறையில் உட்கார வைத்து உள்ளீர்களா ?


vbs manian
செப் 09, 2025 08:53

தமிழ் நாட்டில் ப ஜ க நாடு முழுதும் செய்து வரும் வளர்ச்சி பணிகளை யாரும் பார்க்கவில்லை. ப ஜ க என்றாலே சமஸ்க்ரிதம் ஹிந்தி வடக்கு பிராமின் என்று நினைத்து வசைபாடுகின்றனர். குறுகிய மொழி பிரிவினைவாதம் மக்களை திசை திருப்பி விடுகிறது. மோடி அரசு தமிழகத்தில் செய்து வரும் நல்ல திட்டங்களை இருட்டடிப்பு செயகிறார்கள். தமிழ் தமிழன் என்று பேசியே தமிழகத்தை உச்சத்தில் கொண்டு போக முடியும் என்று நினைக்கிறார்கள். தேசிய நீரோட்டம் இங்குள்ள பல கட்சிகளுக்கு வேப்பங்காய். மத்திய அரசை எதிர்க்கும் போக்கே உச்சமாக உள்ளது. மூளை சலவை நன்றாக வேலை செயகிறது.


Sundar R
செப் 09, 2025 08:36

திமுகவை கடுமையாக எதிர்க்கும் மதிப்பிற்குரிய குருமூர்த்தி அவர்கள், மோடிஜி, அமித்ஷாஜி போன்றவர்களிடம் எடுத்துச் சொல்லி 2026 தேர்தலுக்கு முன்பாகவே திமுகவை தகனம் செய்ய ஏற்பாடுகளை செய்யலாமே. திமுகவை தகனம் செய்யும் விஷயத்தில் தமிழர்கள் யாரும் சுணக்கம் காட்டக் கூடாது.


P Karthikeyan
செப் 09, 2025 08:32

இப்போது அதிமுக பாஜக கூட்டணியில் நடக்கும் பல குழப்பங்களுக்கும் பாமக குடும்ப குழப்பத்துக்கும் அண்ணாமலை பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து விலகினத்துக்கும் இந்த மயிலாப்பூர் அறிவுஜீவி ஹையோ ஹையோ தான் காரணம் என்று கூறப்படுகிறது .. அமித் ஷாவுக்கு அரசியல் அறிவுரை சொல்லும் அறிவுஜீவி இவர்தான். இவர் ஒரு திமுக அனுதாபி pro dmk ..சசிகலா , எடப்பாடி ஆகியோரை எவ்வாறெல்லாம் இவர் வசைபாடினார் என்பது சரித்திரம் அறியும்.


ப.சாமி
செப் 09, 2025 08:00

ஊழலுக்கும் மக்களுக்கும் நேரிடையான தொடர்பு இல்லை. அதனால் மக்கள் கவலைப்படுவதில்லை. அரசியல்வாதிகள் தமக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லையே என்கிற ஆதங்கம் போட்டி பொறாமை. லஞ்சத்திற்கும் மக்களுக்கும் தொடர்பு உண்டு. கொடுப்பது மக்கள் வாங்குவது அதிகாரிகள்.


Iyer
செப் 09, 2025 06:09

குருமூர்த்தி அவர்கள் சொல்வது 100% உண்மை.


Manaimaran
செப் 09, 2025 05:16

முதல்ல .O.Ps. இப்ப செங் இனி எவனும் . உன் பேச்ச கேக்க மாட்டான்


Kasimani Baskaran
செப் 09, 2025 04:11

திமுகவும் ஊழலும் இணைபிரியாதவை. மழலை பள்ளியில் கேட்டால் கூட இதே பதில் கிடைக்கும்.