உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருத்துவமனையில் தயாளு அம்மாள் அனுமதி

மருத்துவமனையில் தயாளு அம்மாள் அனுமதி

சென்னை : முதல்வர் ஸ்டாலினின் தாயார் தாய் அம்மாள், உடல்நலக் குறைவால், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவியும், முதல்வர் ஸ்டாலினின் தாயுமான தயாளு அம்மாள், 92; சென்னை கோபாலபுரம் வீட்டில் வசித்து வருகிறார்.வயது முதிர்வால் அவ்வப்போது ஏற்படும் உடல்நலக் குறைவுக்காக, மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று, வீடு திரும்புவது வழக்கம். கடந்த மாதம் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.இந்நிலையில், நேற்று அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவரை, மருத்துவக் குழுவினர் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

kumarkv
மே 08, 2025 19:24

இன்னும் உசுறோடுதான் இருக்கா


ஆரூர் ரங்
ஏப் 28, 2025 15:05

வீட்டை இலவச மருத்துவமனையாக ஆக்கும் உயில் என்னாச்சு?.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை