உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் : கருணாநிதி

தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் : கருணாநிதி

மனிதாபிமானத்தோடு, மறப்போம், மன்னிப்போம் என்ற நிலையில், சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய மூன்று பேரையும் தூக்கு தண்டனையிலிருந்து, காப்பாற்ற நம்மால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசர அவசியமாகிறது,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். .இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: 'தூக்கு தண்டனையே கூடாது' என, நான் பல ஆண்டுகளாக சொல்லி வருகிறேன். அந்தக் கருத்து, ராஜீவ் கொலை குற்றவாளிகளான சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய மூன்று பேருக்கும் பொருந்தும். குற்றம் சாட்டப்பட்டுள்ள மூவருமே, 20 ஆண்டுகள் சிறையிலேயே இருந்து விட்டனர். அவர்கள் செய்தது குற்றமே ஆயினும், இத்தனை ஆண்டுகள் அவர்கள் சிறையில் இருந்ததை மனதில் கொண்டு, மனிதாபிமானத்தோடு, மறப்போம், மன்னிப்போம் என்ற நிலையில், உலகெங்கும் உள்ள தமிழர்கள் எல்லாம் விடுக்கின்ற வேண்டுகோளினை ஏற்று, தூக்கு தண்டனையிலிருந்து, அவர்களை காப்பாற்ற நம்மால் முடிந்த முயற்சிகளை எல்லாம், மேற்கொள்ள வேண்டியது அவசர அவசியமாகிறது. தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் எல்லாம், உருக்கத்தோடு அவர்கள் மூவரின் உயிர்களையும் காப்பாற்ற வேண்டுமென விடுத்துள்ள வேண்டுகோளை புறக்கணிக்காமல், இரக்கச் சிந்தனையோடு இதை அணுகிட வேண்டும். மத்திய அரசை ஆளும் பிரதான கட்சியான காங்கிரசும், அதன் தலைவர் சோனியாவும் இப்பிரச்னையில், அக்கறையோடு செயல்பட்டு, மூன்று உயிர்களையும் காப்பாற்ற முன் வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன். முடிவெடுக்க சில நாட்களே உள்ள நிலையில், மத்திய அரசும், தமிழக அரசும் இப்பிரச்னையில், அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு, மூவர் மீதான தூக்கு தண்டனையை ரத்து செய்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை