உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாஜி அமைச்சர் மீதான அவதுாறு வழக்கு விசாரணை 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு

மாஜி அமைச்சர் மீதான அவதுாறு வழக்கு விசாரணை 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு

விழுப்புரம்: விழுப்புரம் கோர்ட்டில் நடந்து வரும் முன்னாள் அமைச்சர் மீதான அவதுாறு வழக்குகளின் விசாரணை 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.செஞ்சி அடுத்த நாட்டார்மங்கலத்தில் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் 7 தேதியும், வானுார் அடுத்த ஆரோவில் பஸ் நிலையத்திலும், 10ம் தேதி கோட்டக்குப்பம் நகராட்சி திடலிலும், மே 1ம் தேதி மற்றும் ஜூன் 21ம் தேதி விழுப்புரத்திலும் நடந்த அ.தி.மு.க., பொதுக்கூட்டங்கள் நடந்தது. அதில் பேசிய முன்னாள் அமைச்சர் சண்முகம், தமிழக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் அவதுாறாக பேசியதாக புகார் எழுந்தது.இதுகுறித்து, அவர் மீது, அரசு வழக்கறிஞர் சுப்ரமணியம், தனித்தனியாக 5 அவதுாறு வழக்குகளை தொடர்ந்தார்.இவ்வழக்கு நேற்று விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சண்முகம் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி, இந்த அவதுாறு வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு மீதான உத்தரவு வரும் வரை, வழக்கு விசாரணையை ஒத்தி வைக்கக்கோரி மனு அளித்தனர்.மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி பூர்ணிமா, 5 வழக்குகளின் விசாரணையை வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ