உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி என்பது வதந்தி: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி என்பது வதந்தி: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி என்பது வதந்தி என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கை. கடந்த 2023ம் ஆண்டு இறுதியில் தமிழகம் எதிர்கொண்ட மிக்ஜாம் மழை வெள்ள இயற்கைப் பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பதிலும் மீட்டெடுப்பதிலும் நமது திராவிட மாடல் அரசு அர்ப்பணிப்புடன் செயலாற்றியது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gdlmxid0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

கூட்டாட்சி

'எல்லாருக்கும் எல்லாம்' என்பதே திராவிட மாடல் அரசின் அடிப்படைக் கோட்பாடு. ஜனநாயகம் மலர்வதற்கு மாநிலங்களின் உரிமைகளை மதிக்கக்கூடிய - கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படக்கூடிய மத்திய அரசு 2024 லோக்சபா தேர்தலுக்குப் பின் அமைந்திட வேண்டும்.

பொய்த் தகவல்

ஜனவரி 21ம் தேதி சேலத்தில் நடைபெறுகிற இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு எழுப்புகின்ற 'மாநில உரிமை மீட்பு முழக்கம்' டில்லி வரை அதிரட்டும். இளைஞரணி மாநாட்டிற்கு இளைஞர்கள் வரத் தயாராகியுள்ள நிலையில் என் உடல்நிலை குறித்து பொய்த் தகவல்களைப் பரப்பிப் பார்த்தனர். அயலகத் தமிழர் நாள் விழாவில் உற்சாகத்துடன் பங்கேற்ற நான், தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது எனக்கென்ன குறைச்சல் என்று கேட்டேன். நான் நலமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன்.

வதந்தி

உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்படவிருக்கிறது என்ற வதந்தியைப் பரப்பத் துவங்கினர். அதற்கு அமைச்சர் உதயநிதி “எல்லா அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாகத்தான் இருக்கிறோம்” என்று பதிலடி கொடுத்து, வதந்தி பரப்பியோரின் வாயை அடைத்துவிட்டார். உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி என்பது வதந்தி. இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

Matt P
ஜன 14, 2024 13:53

அம்மா ராமர் கோயிலில் போய் கேட்டுக்கும். ராமா மகனுக்கு பதவி வரும்படி செய்யுங்க. ராமர் நினைச்க்குவார் என்னக்கே பதவி இல்லையென்று காட்டுக்கு அனுப்பிச்சிட்டாங்க. இவங்க வேற .....வந்துட்டாங்க.


Matt P
ஜன 14, 2024 13:47

உண்மையிலேயே துணை ,முதலமைச்சர் தேவைப்பட்டால் யாருக்கு தான் கொடுப்பீங்க...மஹேஷுக்கா?இல்லை துரைமுருகனுக்கா?


Soumya
ஜன 13, 2024 23:27

மொதல்ல என்ன சொன்ன உன் குடும்பத்திலிருந்து யாரும் வரமாட்டார்கள்னு சொன்ன அப்புறம் இளைஞர் அணி தலலவராக்குன அதுக்கு அப்புறம் விளையாட்டு அமைச்சராக்குன இப்ப வதந்தின்னு சொல்லி மக்களை ஏமாத்துற இனியும் உன் பொய்களையும் பொய் வாக்குறுதிகளையும் மக்கள் நம்ப தயாராக இல்லை


g.s,rajan
ஜன 13, 2024 23:19

எங்கப்பன் இல்லை என் பையன் குதிருக்குள் இல்லை .....


g.s,rajan
ஜன 13, 2024 22:06

நெருப்பில்லாமல் புகையாது ,வதந்தியும் ஒரு நாள் உண்மையாகும் .....


adalarasan
ஜன 13, 2024 21:58

சில வருடங்களுக்கு முன் இவர்தான் தன குடும்ப உறுப்பினர் எவருக்கும், கட்சியிலோ, அல்லது, மாந்திரியாகவோ, பதவி கொடுக்கமாட்டேன் என்று சொன்னார்>/ அது போலவா?


அருண் குமார்
ஜன 13, 2024 20:50

பொய்யை தவிர வேறு எதையும் பேசமாட்டார் நம்ம விடியல்


AMSA
ஜன 13, 2024 22:02

அதுதான் தெரிஞ்ச கதையாச்சே .. அவரு உண்மை பேசி நாளாச்சு


Murugesan
ஜன 13, 2024 20:23

அண்ட புளுகன்


Duruvesan
ஜன 13, 2024 20:15

எல்லோருக்கும் எல்லாம், அதாவது அவங்க குடும்பத்தில் உள்ளவர் எல்லோருக்கும் எல்லாம். ஆக தீயமுக கம்பெனி முதலாளி விடியல் வாழ்க


வெகுளி
ஜன 13, 2024 20:07

உதைனாவை துணை ஆக்கி அன்னபூரணியை முதல்வராக்கினாலும் ஒரு பிரச்னையும் இல்ல.. நீங்க நடத்துற ஷோ... அதுல யார் என்ன வேடம் கட்டணும்ன்னு நீங்க முடிவு செய்யலாம்..


மேலும் செய்திகள்







புதிய வீடியோ