உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  புதிய அணி உருவாக வாய்ப்பு சொல்கிறார் தினகரன்

 புதிய அணி உருவாக வாய்ப்பு சொல்கிறார் தினகரன்

ஒட்டன்சத்திரம்: ''சட்டசபை தேர்தலில் புதிய அணி ஒன்று உருவாக வாய்ப்பு உள்ளது. அதற்கான பணிகள் நடந்து வருகிறது, என, ஒட்டன்சத்திரத்தில் அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மதிக்கத்தக்க நண்பர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் விசுவாசி. எந்த எதிர்பார்ப்பும் இன்றி இருந்தவர். அவரின் அடுத்த கட்ட செயல்பாடு அவரது பத்திரிகையாளர் சந்திப்புக்கு பிறகு தான் தெரியும். அவர் எங்களோடு பயணித்துக் கொண்டிருப்பவர். அ.தி.மு.க., வில் இருந்து நீக்கப்பட்டதால் மனவருத்தத்தில் இருந்தார். தமிழக மக்கள் நலனுக்காக கவர்னர் ரவி செயல்பட்டால் சிறப்பாக இருக்கும். தமிழகத்தை பொறுத்தவரை சட்டம், ஒழுங்கு பிரச்னை உள்ளது. ஆனால் தீவிரவாதம் இல்லை. தமிழக மக்கள் பெரும்பான்மையாக ஒரு அரசை தேர்வு செய்துள்ளனர். நிதி தொடர்பாக மக்கள் நலன் சார்ந்த பிரச்னைக்கு மத்திய அரசு தாயுள்ளத்தோடு பரிசீலக்க வேண்டும். தி.மு.க., தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதுதான் ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டமாக உள்ளது. எஸ்.ஐ.ஆர்., திருத்தம் பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. டிச., 4 வரை கால அவகாசம் போதுமானதே. வரைவு வாக்காளர் பட்டியல் வந்த பின்பு திருத்தங்கள் இருந்தால் செய்யலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை