உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாளை முதல் புத்தகத்திருவிழா :மாணவர்களுக்கு சிறப்பு தள்ளுபடி

நாளை முதல் புத்தகத்திருவிழா :மாணவர்களுக்கு சிறப்பு தள்ளுபடி

மதுரை : ''மதுரை புத்தகத் திருவிழாவில் மாணவர்களுக்கு 15 சதவீதம் தள்ளுபடி தரப்படும்,'' என, கலெக்டர் சகாயம் தெரிவித்தார்.நிருபர்களிடம் அவர் கூறியதாவது:தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் செப்., 2 முதல் 11 வரை புத்தகத் திருவிழா தமுக்கம் மைதானத்தில் நடக்கிறது. 128 தமிழ், 55 ஆங்கிலம், 13 மல்டிமீடியா ஸ்டால்கள் இடம்பெறுகின்றன. அனுமதி இலவசம். தினமும் காலை 11 முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி நடக்கிறது. புத்தகம் வாங்கும் பொதுமக்களுக்கு 10 , மாணவர்களுக்கு 15 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். அடையாள அட்டை வைத்திருக்கும் மாணவர்களுக்கு மட்டுமே சலுகை, என்றார். சங்க செயலாளர் லட்சுமணன், தலைவர் சொக்கலிங்கம், கவிஞர் தேவேந்திரபூபதி, மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தூரன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி