உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுகிறதா: எல்.கே. சுதிஷ் பேட்டி

தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுகிறதா: எல்.கே. சுதிஷ் பேட்டி

சென்னை; 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெற்றி பெறும் என்று அக்கட்சியின் பொருளாளர் எல். கே. சுதிஷ் கூறி உள்ளார்.சென்னையில் இன்று நடைபெற்ற ஜி.கே. மூப்பனார் நினைவுநாள் நிகழ்ச்சியில் எல்.கே. சுதிஷ் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இபிஎஸ், தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 2026 சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை தேமுதிக அறிவிக்கவில்லை. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுடன் மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சியில் எல்.கே. சுதிஷ் கலந்து கொண்டார். நிகழ்ச்சியை முடித்து வந்த அவரிடம் தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுகிறதா என்ற கேள்வியை நிருபர்கள் எழுப்பினர்.அதற்கு எல்.கே. சுதிஷ் அளித்த பதில்;ஜிகே வாசன், ஜிகே மூப்பனார் குடும்ப நிகழ்ச்சியில் நாங்கள் கலந்து கொண்டு இருக்கிறோம். இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தமே கிடையாது. நாங்கள் வந்ததே ஜி.கே. மூப்பனாருக்கு அஞ்சலி செலுத்தத்தான். ஜி.கே. வாசனுக்கும், எங்கள் குடும்பத்துக்கும் 40 ஆண்டுகால நட்பு. அரசியலில் அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு என்று உண்டு. நட்பு ரீதியாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளோம். இதற்கும், அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.2026ல் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணியே அமோக வெற்றி பெறும். கூட்டணியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது பற்றி எங்களின் பொதுச் செயலாளர் ஏற்கனவே கூறிவிட்டார். நாங்கள் அதை வரவேற்கிறோம்.யாருடன் கூட்டணி என்பதை பற்றி ஜன.9ம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்போம். இவ்வாறு எல்.கே.சுதிஷ் பேட்டி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Sundar R
ஆக 30, 2025 19:10

தேமுதிமுக ஒரு ANTI-DMK கட்சி என்பது போல் தமிழக மக்களிடம் அவர்கள் காண்பித்துக் கொள்வார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. பிரேமலதா விஜயகாந்த்திடம் பாராட்ட வேண்டியது, விஜயகாந்த்தைப் போலவே எல்லோருக்கும் சாப்பாடு போடுவார். அதற்காக, தமிழகத்திற்கு எள்ளளவும் சம்பந்தமே இல்லாத தெலுங்கு கட்சியான திமுக, தவெக, விசிக, மதிமுக, தேமுதிமுக ஆகிய கட்சிகளுக்கு ஓட்டு போட்டால், தமிழக சட்டசபை நாயுடு ஹாலாகத் தான் இருக்கும். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்களுக்கு சட்டசபையிலோ, தலைமைச் செயலகத்திலோ, மரியாதை என்பது இருக்காது... எனவே, தமிழக மக்கள் மேற்கூறிய கட்சிகளுக்கு ஓட்டு போடுவதைத் தவிர்ப்பது நல்லது.


V RAMASWAMY
ஆக 30, 2025 19:30

அன்பரே இப்பொழுதுள்ள அரசில் எத்தனை ஆந்திரா, தெலுங்கானா ரெட்டிகள், நாயுடுகள், மற்ற தெலுங்கர்கள் உள்ளனர் என்பது புரியாமல் எழுதியிருக்கிறீர்கள் போலிருக்கிறது.


V RAMASWAMY
ஆக 30, 2025 18:33

Good that wiser counsel has prevailed on DMDK, may be Captains holy soul has given it to them.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை