உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேட்புமனுவையே மறந்து வந்த திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன்

வேட்புமனுவையே மறந்து வந்த திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தேனி: தேனி தொகுதி திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன், வேட்புமனு தாக்கலுக்கு வந்தபோது, அப்படிவத்தையே மறந்து வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.தமிழகத்தில் ஏப்.,19ல் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிகிறது. கடைசி நாளான இன்று ஏராளமானோர் தாக்கல் செய்துள்ளனர். தேனி தொகுதியில் திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய தேனி கலெக்டர் அலுவலகம் வந்தார். வரும் அவசரத்தில் தனது வேட்புமனு படிவத்தை மறந்து வந்துள்ளதை உணர்ந்த தங்கதமிழ்ச்செல்வன், தனது உதவியாளரிடம் கூறினார்.உடனடியாக, உதவியாளர் வேகமாக பைக்கில் சென்று வேட்புமனுவை எடுத்துக்கொண்டு ஓடி வந்தார். அந்த வேட்புமனுவை பெற்றுக்கொண்டு தங்கதமிழ்ச்செல்வன் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்ய வந்து, அந்த மனுவையே மறந்து வந்ததால், அவருடன் வந்த அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி உள்ளிட்டோர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

ram
மார் 27, 2024 16:36

தமிழ் மக்களின் தலையெழுத்து இதுபோன்ற ஆட்கள்


DUBAI- Kovai Kalyana Raman
மார் 27, 2024 15:34

Ivaruku ottu potta theni vilankirum ipove vetpu manu va marantha alu jeicha , makkalye maranthu viduvar parliement canteen la poi tea ponda kudicitu varalam vera onnum use ila jeicha


S Regurathi Pandian
மார் 27, 2024 15:19

எல்லாம் இணையவழி / டிஜிட்டல் இந்தியா என்கின்றனர் இதையும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாமே


A1Suresh
மார் 27, 2024 14:56

ஆரம்பமே அமர்க்களம்


Raghavan
மார் 27, 2024 14:24

கொக்குக்கு ஒண்ணே மதி எப்படியாவது ஜெய்க்கவேண்டும்


ssspgmailcom
மார் 27, 2024 14:22

தடங்கலுக்கு வருந்துகிறார்


Lion Drsekar
மார் 27, 2024 14:06

குறுநில மன்னரின் வாரிசு பொது மேடையில் நீங்கள் வரும் பாராளுமன்ற தேர்தல் தேதி ஜூன் ஆம் தேதி வருகிறது,உங்களை நம்பலாமா என்று கேட்டு பிரச்சாரம் செய்கிறாரே வந்தே மாதரம்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை