உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உச்சவரம்பு நிர்ணயித்து மது விற்கும் திமுக அரசு: அண்ணாமலை விமர்சனம்

உச்சவரம்பு நிர்ணயித்து மது விற்கும் திமுக அரசு: அண்ணாமலை விமர்சனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: உச்சவரம்பு நிர்ணயித்து திமுக அரசு மது விற்பனை செய்கிறது என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இது குறித்து அண்ணாமலை கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில், தனது விவசாய நிலத்தில் மது அருந்தியதைத் தட்டிக் கேட்ட சரவணன் என்ற விவசாயி, கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகம் முழுவதுமே கட்டுப்பாடற்ற மது விற்பனையால், கொலைக் குற்றச் சம்பவங்கள் தொடர்கின்றன. பல்லடம் அருகே, குடியிருப்புப் பகுதியில் மது அருந்தியதைத் தட்டிக் கேட்ட ஒரு குடும்பத்தையே, மது போதையில் ஒரு கும்பல் கொலை செய்த சம்பவத்தின் சுவடு மறையும் முன்னரே, மீண்டும் அதே போன்ற சம்பவம் நிகழ்ந்திருப்பது, திமுக அரசின் கையாலாகாத்தனத்தைக் காட்டுகிறது.உச்சவரம்பு நிர்ணயித்து மது விற்பனை செய்யும் திமுக அரசு, குடியிருப்புப் பகுதிகளிலும், விவசாய நிலங்களிலும், கும்பலாக அமர்ந்து மது அருந்துவதைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. பொதுமக்கள் பாதிப்புக்குள்ளானால் என்ன, சாராய ஆலைகள் நடத்தும் திமுகவினருக்கு வருமானம் வந்தால் போதும் என்ற மனப்பான்மையில் திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பது மிகுந்த ஆபத்தான போக்கு. தங்கள் கட்சியினருக்கு வருமானம் என்ற ஒரே நோக்கத்திற்காக, மது விற்பனையால் தொடரும் குற்றச் சம்பவங்களையும், அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுவதையும், தடுக்க திமுக அரசு தவறினால், இதனால் ஏற்படும் விளைவுகளை இந்த அரசு சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

அப்புசாமி
ஜன 04, 2024 19:09

இவ்வளவு பேசும் அண்ணாமலைக்கு தமிழகத்தில் சாராயக் கடைகளை மூடுவேன்னு சொல்ல தைரியம் இருக்கா? மோடி ஜீ தான் சொல்லுவாரா?


Ramesh Sargam
ஜன 05, 2024 01:23

சொல்ல மாட்டார்கள். ஆட்சிக்கு வந்தபிறகு செய்துகாட்டுவார்கள். பொறுத்திரு நண்பா.


g.s,rajan
ஜன 04, 2024 18:11

All People Should Drink with their Families to Achieve the Tasmac Target.....


J.Isaac
ஜன 04, 2024 15:52

அனைத்து வகையான போதை பொரூட்களுக்கும் பேர் பெற்றது


hari
ஜன 04, 2024 15:18

டாஸ்மாக் முட்டுஸ் கோவமா வருவாங்க பாருங்க


hari
ஜன 04, 2024 17:55

...... எப்படி....24 hrs


செந்தமிழ் கார்த்திக்
ஜன 04, 2024 14:38

மேற்கூறிய சம்பவங்கள் வருத்தம் தான் தருகிறது. குடிப்பவனாய் பார்த்து திருந்தா விட்டால் குடியை ஒழிக்க முடியாது. ஆனால் இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் மதுவை வைத்து அரசியல் செய்வீர்கள் ? மது அரசியல் மக்களிடம் எடுபடவில்லை. BJPy ஆளும் மாநிலங்களில் கூட இன்றும் புதிய புதிய மதுபான கடைகள் திறக்க அனுமதி கொடுக்க படுகிறதே ? காந்தி பிறந்த குஜராத்தில் கூட பல இடங்களில் மது விற்க படுகிறதே ? பதில் சொல்லவே மாட்டீங்களே ??


karupanasamy
ஜன 04, 2024 16:06

பொது மக்களை கொலை செய்தவனும் திமுகக்காரன் அதை நியாயப்படுத்தும் நீயும் திமுகக்காரன்.


சேஷாத்ரி,பட்டமங்கலம்
ஜன 04, 2024 13:03

As far as TN politics is concerned I fully stand with Annamalai and I hope everyone who wants to see dravidam (not just DMK but the complete ideology) uprooted also does the same.


கிருஷ்ணதாஸ்
ஜன 04, 2024 12:39

விற்பனை இலக்கு என்பதே சரி. உச்ச வரம்பு என்ற வார்த்தை, இந்த செய்திக்குப் பொருந்தாது!


Vivekanandan Mahalingam
ஜன 04, 2024 11:34

திராவிடியாக்களை விரட்டினால் தான் விமோச்சனம் - இந்த இரண்டு ஆண்டிலும் திராவிடியாக்களை பற்றி மக்கள் புரிந்து கொள்ள வில்லையென்றால் , தமிழக நிலை பரிதாபம் தான்


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி