| ADDED : நவ 18, 2025 06:44 AM
திருவாடானை: எஸ்.ஐ.ஆர்., பணியில் தேர்தல் கமிஷன் என்ற ஜனநாயக அமைப்பை தி.மு.க.,வினர் களங்கபடுத்துகிறார்கள் என ஹிந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன்சம்பத் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் அவர் கூறியதாவது- ஹிந்து மக்கள் கட்சி தென்மாவட்டங்களின் செயற்குழு கூட்டம் திருவாடானையில் நடந்தது. வரும் சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம். தி.மு.க., அரசு ஹிந்துக்கள், கோயில் களுக்கு, நம்முடைய பசு மாடுகளுக்கு விரோதமானது. இந்த அரசு புத்தக கண்காட்சி என்ற போர்வையில் ஹிந்து விரோதத்திற்கு எதிரான கருத்துகளை பரப்புகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.,வுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம். பீஹார் தேர்தலுக்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி புத்துணர்ச்சி பெற்றுள்ளது. இதே தி.மு.க., வினர் தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் சேர்க்கபட்டுள்ளார்கள். எனவே சிறப்பு சீர்திருத்தம் வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்கள். இன்றைக்கு எஸ்.ஐ.ஆர்., வேண்டாம் என்கிறார்கள். தேர்தல் கமிஷன் என்ற ஜனநாயக அமைப்பை தி.மு.க.,வினர் களங்கபடுத்துகிறார்கள். தேர்தல் கமிஷனுக்கு எதிராக பேசும் காங்., எம்.பி., ராகுல் ஓட்டு உரிமையை பறிக்க வேண்டும். த.வெ.க.,வின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றார்.