உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., கொடூரர்களை காப்பற்றுவதுதான் திராவிட மாடலா - சீமான்

தி.மு.க., கொடூரர்களை காப்பற்றுவதுதான் திராவிட மாடலா - சீமான்

சென்னை:'ஆளும் தி.மு.க., வை சேர்ந்த கொடூரர்களை காப்பாற்ற துணை நிற்பதுதான் திராவிட மாடலா' என, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.அவரது அறிக்கை:கிழக்கு கடற்கரை சாலையில், நள்ளிரவில் காரில் பயணித்த பெண்களை, தி.மு.க., கொடி கட்டிய காரில் பயணித்த சிலர், குடிபோதையில் வழிமறித்து மிரட்டியுள்ளனர். அப்பெண்களை தாக்க வந்ததோடு, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில், வீடு வரை துரத்தி சென்ற காட்சிகள், நெஞ்சை பதற செய்கின்றன.பெண்கள் புகார் அளித்தும், தி.மு.க., அரசின் காவல் துறை நான்கு நாட்களாக, முறையாக விசாரணை நடத்தவில்லை. குற்றவாளிகளுக்கு ஆதரவாக, பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்டி சமரசம் பேசி, வழக்குப்பதிவு செய்ய மறுத்தது வெட்கக்கேடானது; வன்மையான கண்டனத்துக்கு உரியது.இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம், தமிழகம் என்று வாய் கூசாமல் பேசுவதற்கு மனச்சான்று உறுத்தவில்லையா முதல்வரே. குற்ற செயலில் ஈடுபடும், ஆளும் தி.மு.க.,வை சேர்ந்த கொடூரர்களை காப்பாற்ற துணை நிற்பதுதான் திராவிட மாடலா. தி.மு.க., ஆட்சியில் நிகழும் அத்தனை அட்டூழியங்களுக்கும், மக்கள் விரைவில் முடிவு கட்டுவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை