உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தீயசக்தி தி.மு.க., துக்ளக் விழாவில் அண்ணாமலை ஆவேசம்

தீயசக்தி தி.மு.க., துக்ளக் விழாவில் அண்ணாமலை ஆவேசம்

சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் தி.மு.க., என்ற தீயசக்தியை தோற்கடிக்க வேண்டும் என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.'துக்ளக்' பத்திரிகையின், 54வது ஆண்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.

விஞ்ஞான ஊழல்

விழாவில், அண்ணாமலை பேசியதாவது ; வரும் லோக்சபா தேர்தலில் ராஜிவ் மகன், ஷேக் அப்துல்லா மகன், கருணாநிதி மகன் என, வாரிசு அரசியலால் நிரம்பி இருக்கும் 'இண்டியா' கூட்டணி ஒரு பக்கம் போட்டியிடுகிறது. இன்னொரு பக்கம் நாட்டின் வளர்ச்சிக்காக, ஒவ்வொரு நிமிடமும் உழைத்துக் கொண்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., கூட்டணி தேர்தலை சந்திக்கிறது.தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தி.மு.க., என்றாலே ஊழல் என்று தான் அர்த்தம். விஞ்ஞான ரீதியில் ஊழல் புரிவதில் கில்லாடிகள் அவர்கள். தி.மு.க.,வின் ஊழல்களுக்கு சர்க்காரியா கமிஷனிலேயே சான்றிதழ் கொடுத்துள்ளனர். சர்க்காரியா கமிஷன் அறிக்கையில், தி.மு.க.,வின் ஊழல்கள் புட்டு புட்டு வைக்கப்பட்டுள்ளன.சர்க்காரியா கமிஷன் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரப்பூர்வமாக இருக்க, அதில் இருந்து தப்பிக்க கணக்குப் போட்டார் மறைந்த முதல்வர் கருணாநிதி. அதற்காக, எதிராக இருந்த காங்கிரசோடு சரண்டர் ஆக முடிவெடுத்தார்.உடனே, இந்திராவை வரவேற்று, 'நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக' என கருணாநிதி அழைத்தார். இதெல்லாம் 1980ல் நடந்தது. அதன் பின்பே, காங்கிரசுடன் கூட்டணி வைத்தார். அன்றைக்கு மரியாதையாக காங்கிரசை நடத்திய தி.மு.க., இன்றைக்கு கேவலமாக நடத்துக்கிறது. அதற்கு காரணம், காங்கிரஸ் கட்சி தேய்மானத்தில் இருப்பதுதான்.காங்கிரஸ் கட்சியை எத்தனை மோசமாக தி.மு.க., நடத்தினாலும், அதைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாத அக்கட்சித் தலைவர்கள் தி.மு.க., பின்னால் செல்வதைத்தான் கவுரவமாக நினைக்கின்றனர். இரு கட்சிகளுக்கும் இப்போதைக்கு கொள்கைகள் எதுவும் கிடையாது. எப்படியாவது ஆட்சியில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் ஒரே குறிக்கோள்.

ஹிந்தி படித்து இருந்தால்

இண்டியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பீஹார் முதல்வர் நிதீஷ்குமார் ஹிந்தியில் பேசினார்.முதல்வர் ஸ்டாலினுக்கு ஹிந்தி தெரியாது என்பதால், அதை மொழி பெயர்க்க வேண்டும் என, டி.ஆர்.பாலு, நிதீஷ் குமாரிடம் கேட்டார். உடனே அவருக்கு கோபம் வந்து விட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் கடந்த பின்பும் ஹிந்தி கற்காமல் இருக்கிறீர்கள்.முறையாக ஹிந்தி படித்து இருந்தால், இந்த பிரச்னையெல்லாம் கிடையாது என்று சொல்லி, கடைசி வரை ஹிந்தி மொழி பெயர்ப்புக்கு ஏற்பாடு செய்யவில்லை நிதீஷ்குமார். மொத்தத்தில் நிதீஷ்குமார் தி.மு.க.,வை மட்டுமல்ல, தமிழக மக்கள் பெரும்பான்மையாக ஓட்டு போட்டு தேர்வு செய்த முதல்வர் ஸ்டாலினையும் அவமானப்படுத்தி விட்டார். இதனால், அவமானப்பட்டது அவர் மட்டுமல்ல; தமிழக மக்களும் தான்.இத்தனை அவமானத்துக்குப் பின்னும் தி.மு.க., இண்டியா கூட்டணியை தொங்கி பிடித்தபடி இருப்பதற்கு காரணம், தி.மு.க.,வின் இயலாமை. சமீபத்தில் தமிழகத்தில், தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. அதில், 6 லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் தொழில் முதலீடாக ஈர்க்கப்பட்டதாகச் சொல்கின்றனர். அதை உலக மகா சாதனையாகவும் பேசுகின்றனர்.

ஈர்க்கப்பட்டிருக்கும்

ஆனால், குஜராத்தில் நடந்த தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில், 26 லட்சம் கோடி ரூபாய்க்கு தொழில் முதலீடு ஈர்க்கப்பட்டிருக்கிறது.உ.பி., மாநிலத்திலும் அதிக அளவில் தொழில் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகம் தொழில் மூதலீடுகளில் மட்டுமல்ல; எல்லா விஷயங்களிலும் பின் தங்கி தான் இருக்கிறது. மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து, தமிழகத்தில், தேசிய அளவிளான தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி, அதற்கு பிரதமர் மோடியை அழைத்திருந்தால், தமிழகத்திலும் கூடுதல் கோடிகளுக்கு தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருக்கும்.

தி.மு.க., பைல்ஸ்--3

தமிழகத்தில் தி.மு.க.,வின் அடாவடி ஆட்சி, குடும்ப ஆட்சி, நிர்வாக திறமையில்லாத ஆட்சி நடக்கிறது. இந்நிலை மாற வேண்டும். அதற்கு தமிழக அரசியலில் மாற்றம் வர வேண்டும். அந்த மாற்றத்தை பா.ஜ.,வால் மட்டுமே கொண்டு வர முடியும். தி.மு.க., பைல்ஸ் பாகம் மூன்று டிரைலர் வெளியாகி இருக்கிறது. அதன் முழு அம்சமும் வெளியாகும்போது, தமிழக அரசியல் மட்டுமல்ல; தமிழக அரசே மாறக் கூடிய வாய்ப்பு உள்ளது. கடினமான பாதையில் தமிழக பா.ஜ., தற்போது பயணித்தாலும், தமிழகத்துக்கு விரைவில் நல்லதொரு சூழல் பா.ஜ.,வால் அமையும்.பா.ஜ.,வைப் பொருத்தவரை நேர்மையான, நாணயமான அரசியலை முன்னெடுத்து செல்கிறோம். தி.மு.க., அரசை அகற்றுவது மட்டுமல்ல, தமிழக அரசியலில் இருந்து தி.மு.க.,வையும் மாற்ற வேண்டும்.அதுவரை தமிழக பா.ஜ., ஓயாமல் தன்னுடைய பணியை வேகமாக செய்யும். தி.மு.க., என்ற தீயசக்தியை, தேர்தல் வாயிலாக தோற்கடித்து, தமிழக அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். அது தான் எங்கள் ஒரே இலக்கு. இவ்வாறு அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி., சசிதரூரும் கலந்து கொண்டு பேசினார்.

''துக்ளக்' ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி

விழாவில், 'துக்ளக்' ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி பேசியதாவது:தி.மு.க., ஆட்சியில் நடக்கும் எல்லா அவலங்களையும், தவறுகளையும் பத்திரிகைகளும், ஊடகங்களும் வெளியே கொண்டு வராமல் கடந்து போகின்றன. ஆனால், 'தினமலர்' நாளிதழ் மட்டுமே ஆட்சியில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டி வெளிகொண்டு வருகிறது. அந்நாளிதழுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.வரும் தேர்தலில் பா.ஜ.,வுக்கு ஓட்டு அளிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. பா.ஜ., வளர்வதன் வாயிலாக, தி.மு.க.,வை எதிர்க்க முடியும். அக்கட்சியை எதிர்த்து வந்த அ.தி.மு.க., தற்போது அதை கைவிட்டு விட்டது. தமிழகத்தில் தி.மு.க., தோற்கடிக்கப்பட்டு அப்புறப்படுத்த வேண்டும். அதற்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். லோக்சபா தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் தி.மு.க., தோற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 86 )

Rajagopal
ஜன 15, 2024 19:55

தமிழ் மக்களை சினிமா மாயையால் மயக்கி, பிராமணர்களை முழுதும் வெறுக்கும் அளவிற்கு தள்ளி, சாராயத்திற்கு அடிமைகளாக்கி, வட இந்தியன், தென் இந்தியன், இந்தி ஒழிக, பிரியாணி வாழ்க, காவிரி நீர், நீட் தேர்வு, சனாதன ஒழிப்பு என்று பலவிதமான கோஷங்களை எழுப்பி, ஊடகங்கள், சினிமா, பத்திரிகைகள் எல்லாவற்றையும் ஆக்கிரமித்து, மாநிலமெங்கும் பெரியான், அண்ணாதுரை, கருணாநிதி என்று எல்லாவற்றிற்கும் பெயர் வைத்து, சிலைகள் வைத்து, ஊழலை கலாச்சாரமாக ஆக்கி, கல்வித்தரத்தை முழுவதாகக் குறைத்து, இத்தனை சாதனைகள் செய்திருப்பது அண்ணாமலை போன்ற பாடாவதி நேர்மை கலாச்சசாரத்தை கடைபிடிப்பவர்கள் அறிய இயலவே இயலாது. தென்கிழக்கு ஆசியாவின் சாக்கிரட்டீஸ் என்று பெரியானை புகழ்ந்து அதை பாடப்புத்தகத்தில் திணிக்க யாருக்கு தைரியம் வரும்? குடிசை ஏமாற்று வாரியம், பிச்சைக்காரர் மறுவாழ்வு, கூவம் சீர்குலைப்பு, முதலைகளின் புகலிடம், சாக்கடை ஓடும் மாநகரம், வீராணம் ஏரியிலிருந்து பெரும் குழாய்கள் மூலம் பணம் குமித்தல், சென்னை மாநகராட்சி மஸ்டர் ஊழல், கோவில் சிலைகளைத் திருடி பகுத்தறிவை வளர்த்தல், சாராய விற்பனையை வளர்த்தல், சந்தனக்கட்டை கடத்தல் என்று தலையை சுற்றி வியக்கவைக்கும் அறிவார்ந்த ஊழல் செய்ய அண்ணாமலைக்கு வருமா? புரியத்தான் செய்யுமா? தமிழர்களை திராவிடம் என்று பொய்களை சொல்லி ஏமாற்ற முடியுமா? மக்களை தலைமுறை தலைமுறையாக ஒரு வெங்காயத் தலையனை பிம்பமாக வைத்து முட்டாள்களாக வைத்திருக்க முடியுமா? தமிழை வளர்ப்போம் என்று சொல்லி, தமிழையே படிக்கத் திணறும் ஒரு முதலமைச்சரை உண்டுபண்ண முடியுமா? ஒவ்வொரு அமைச்சரும் ஊழலால் உலகப்புகழ் பெற்று இன்று நாடெங்கும் அறியும்படி அண்ணாமலையிடம் ஆட்கள் இருக்கிறார்களா? ல, ள, ழ என்று உச்சரிக்கத் திணறும் மக்களை உண்டு பண்ண முடியுமா? இதெல்லாம் முடியாதவர்கள் தமிழ்நாட்டில், திராவிட மண்ணில், தாமரையை வளர்க்க முடியாது. தாமரை வளர சகதி வேண்டும். திராவிடர்கள் சாக்கடையாக மாற்றி விட்ட சகதியில் தாமரை எப்படி வளரும்? அறியாமையில் பேசுகிறார் அண்ணாமலை.


g.s,rajan
ஜன 15, 2024 19:06

சக்தியை நல்ல விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்துங்கள்....


Velan Iyengaar
ஜன 15, 2024 18:07

இதே மேடையில் சசி தரூர் பேசிய பேச்சை கூட வெளியிடலாம்


vadivelu
ஜன 15, 2024 19:02

அதையும் கேட்டீங்களா பாய்.


AMSA
ஜன 15, 2024 19:37

பாய் கேக்காம இருப்பாங்களா ?


S.F. Nadar
ஜன 15, 2024 18:03

இந்த பேச்சு ஒட்டு பெற உதவாது ......நீங்கள் மக்களுக்கு நன்மைகள் செய்து ஒட்டு பெறுங்கள் ..சும்மா கண்டபடி திட்டினால் ஒட்டு விழாது ...நோட்டா தான் கிடைக்கும்


AMSA
ஜன 15, 2024 18:39

எப்படி திமுக நன்மை செய்த மாதிரியா ? 4000 கோடி பேக்கேஜ் மாதிரியா ? 30000 கோடி உதயநிதி வீட்டுக்குள் போன மாதிரியா ?


vadivelu
ஜன 15, 2024 19:05

ஒட்டு பெற ஒட்டு வாங்கி வரும் கட்சியின் ஊழலை சொல்லித்தான் ஆகா வேணும்.. மெதுவாகத்தான் எதிர் காட்சிகள் வளரும்.நோட்டாவிற்கு கீழே ஊழல் செய்த செய்யும் கட்சிகள் தள்ளப்படும்.இன்றைய காங்கிரசை கொஞ்சம் நினைத்து பாருங்கள்.மக்களுக்கு நன்மைகள் செய்வதும் சொன்னால்தான் தெரியும், அதைதற்கான செய்கிறார்கள்.ஊரறிந்த ஆட்டை போட்டதா தலைவர்களை ஒதுக்கியங்களுக்கு பிடித்த கட்சியில் உள்ள நல்ல தலைவர்கள தேர்ந்தெடுங்கள்.


Siva
ஜன 15, 2024 17:16

உண்மையிலே தீய சக்திதான் திமுக


Venkataraman
ஜன 15, 2024 17:03

திமுக தலைவர்கள் டெல்லியில் ஆட்சியில் உள்ள பாஜக அமைச்சர்களை சந்தித்து தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக 39000 கோடியை கேட்கிறார்கள். அதற்கு அந்த அமைச்சர்களும் தருவதாக ஒப்புகாகொள்கிறார்கள். ஆனால் திமுகவினர் அனைவரும் ஊழல் பெருச்சாளிகள், விஞ்ஞான ரீதியில் கொள்ளையடிப்பவர்கள் என்று தெரிந்த பிறகும் இவ்வளவு பெரிய தங்கையை அவர்களுக்கு குடுக்கலாம்? பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இந்த பணம் முழுவதையும் மோடி அரசை தோற்கடிக்க திமுகவினர் பயன்படுத்துவார்கள்


Dharmavaan
ஜன 15, 2024 18:29

கொடுக்கிறேன் என்று மத்திய அரசு சொன்னதா


AMSA
ஜன 15, 2024 19:40

மத்திய அரசு கொடுக்காது ... இவனுங்களை பற்றி தெரியும் மத்திய அரசுக்கு ... இப்போம் பிரச்னை என்னவென்றால் ஆமை பாதுகாக்க போகிறோம் என்று 2000 கோடி கடன் கேட்டு கொண்டு இருக்கிறார்கள்


ramesh
ஜன 15, 2024 16:55

பிஜேபி க்கு நிர்வாக திறமை இல்லாததால் தானே பொருளாதாரம் என்றால் என்னவென்று தெரியாத நிர்மலாவை வைத்து பெட்ரோலியம் பொருட்கள் மற்றும் காஸ் விலையை மூன்று மடங்கு ஏற்றி நாட்டுமக்கள் ரத்தத்தை உறிஞ்சுகிறது மக்களின் தீய சக்தி பிஜேபி


AMSA
ஜன 15, 2024 18:43

மின் கட்டணம், சொத்து வரி. தண்ணி வரி. பால்விலை உயர்வு, பஸ்கட்டன உயர்வு இதுவெல்லாம் ரத்தத்தை உறிஞ்சுகிறத... வராதா


Pandi Muni
ஜன 15, 2024 19:04

இன்னும் சத்தமா கூவு.


ramesh
ஜன 15, 2024 16:48

அரசின் பொது துறை நிறுவனங்கள் அனைத்தையும் அதானிக்கு விற்கும் தீயவர்களிடம் இருந்து நாட்டை மீட்க முயலும் தீ போன்ற சக்தி உடைய பலம் பொருந்திய கட்சி திமுக அண்ணாமலை


AMSA
ஜன 15, 2024 18:44

அந்த அதானி அம்பானியிடம் தான் திமுக நேற்று ஒப்பந்தம் போட்டுள்ளது


ramesh
ஜன 15, 2024 16:44

உண்மை தான் .திமுக ஓட்டுக்காக மதத்தால் நாட்டை பிரிக்கும் தீயவர்களை அழிக்கும் தீ போன்ற சக்தி உடையது திமுக அண்ணாமலை


AMSA
ஜன 15, 2024 18:45

திமுக மட்டும் அழிந்தால் தமிழ் நாடே அன்று சந்தோசப்படும்


Dharmavaan
ஜன 15, 2024 16:29

எப்படியாவது தீய சக்தி திமுக ஒழிய வேண்டும்


S.F. Nadar
ஜன 15, 2024 18:51

கனவு காணும் வாழ்க்கை யாவும் ..களைந்து போகும் ஓடங்கள் ....


AMSA
ஜன 15, 2024 19:42

சக்கரம் ஒரே போல் எந்நாளும் சுத்தாது.. 1991 போல் ஒரு நாள் வரும்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை