மேலும் செய்திகள்
ஒருமித்த கருத்து வேண்டும்!
13-Jul-2025
சென்னை:  ''பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அக்கட்சி தலைவர் அன்புமணி, இருவரும் தனித்தனியாக ஆளுக்கொரு கூட்டணியை விரும்புகின்றனர்'' என, தி.மு.க., செய்தி தொடர்பு செயலர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.சென்னையில் அவர் அளித்த பேட்டி:
வரும் சட்டசபை தேர்தலில் பா.ம.க., கூட்டணி குறித்து அன்புமணியிடம் கேட்டால், ஒரு பதில் வரும். ராமதாசிடம் கேட்டால், ஒரு பதில் வரும். இருவரின் நிலைமையும் பட்டிமன்றத்தில் பேசுவது போல் இருக்கிறது. பா.ம.க.,வில் ஆளுக்கொரு கூட்டணியை விரும்புவதால், அக்கட்சியில் பெரிய பிரச்னை நடக்கிறது. தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இல்லை.பா.ஜ.,வின் அழுத்தத்தால், பா.ம.க.,வை அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெறச் செய்ய, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி முயற்சிக்கிறார். பா.ம.க.,வை கூட்டணியில் சேர்த்துக் கொண்டால்தான் ஓட்டுகள் கிடைக்கும் என பா.ஜ., கூறுகிறது. பா.ஜ., என்ன சொல்கிறதோ, அதை கேட்பது மட்டுமே பழனிசாமிக்கு வேலை. அவர், பா.ஜ.,விடம் அச்சப்பட்டு, காலில் விழுந்து கிடக்கிறார். காரணம், அவரது மகன், சம்பந்தி மீது உள்ள வழக்குகள். இவ்வாறு அவர் கூறினார்.
13-Jul-2025