உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., இளைஞரணி மாநாடு கருணாநிதியின் குடும்ப விழா: முன்னாள் அமைச்சர் உதயகுமார் சாடல்

தி.மு.க., இளைஞரணி மாநாடு கருணாநிதியின் குடும்ப விழா: முன்னாள் அமைச்சர் உதயகுமார் சாடல்

பரமக்குடி : ''சேலத்தில் நடந்த தி.மு.க., இளைஞரணி மாநாடு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்ப விழா,'' என ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாடினார்.அவர் மேலும் கூறியதாவது: அ.தி.மு.க., பலவீனமாக இருப்பது தமிழகத்திற்கு நல்லதல்ல என அமைச்சர் உதயநிதி கருத்து தெரிவித்திருப்பது 'ஆடு நனையுதே என்று ஓநாய் அழுத கதையாக உள்ளது.சேலம் தி.மு.க., இளைஞரணி மாநாட்டில் தமிழகத்தின் உரிமைகளை மீட்போம் என நாடகத்தை அவர்கள் அரங்கேற்றி வருகின்றனர். தமிழகத்திற்கு பிரதமர் மோடியை அழைத்து வந்து விளையாட்டு போட்டிகளை மட்டும் துவக்கி வைத்தார்கள். மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று காட்டவில்லை.விளையாட்டு போட்டிகளில் பிரதமரை அழைத்து வந்து விளம்பரப்படுத்துவதில் தி.மு.க.,வினர் முக்கியத்துவம் காட்டுகிறார்கள். சட்டசபையில் போட்ட தீர்மானங்களை நிறைவேற்றவில்லை. இளைஞர் அணி மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை குப்பையில் தான் போடுவார்கள் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி