உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., கடிதம்

ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு, எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசின் உயர்நிலை குழுவுக்கு, தி.மு.க., கடிதம் எழுதியுள்ளது.

அக்கடிதத்தின் விபரம்:

சட்ட ஆணையம் ஒரே நேரத்தில் லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்த தி.மு.க.,வின் கருத்துக்களை கோரியது. இதற்கு தி.மு.க., ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=o7wk8ql3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தற்போது பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகளோடு நகராட்சிகள் மற்றும் ஊராட்சிகளையும் இணைத்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஆய்வு வரம்புகளை வெளியிட்டு உள்ளது.ஒரே நாடு, ஒரே தேர்தல் சுதந்திரமான, நேர்மையான தேர்தலுக்கு முற்றிலும் எதிரானது. சட்ட சபைகளை முன் கூட்டியே கலைப்பது அரசியல் சட்ட விரோதமானது என்பதால் தி.மு.க., எதிர்க்கிறது.மத்திய ஆளுங்கட்சியும் பெரும்பான்மையை இழந்தால் ஆட்சி கவிழும். அதுபோன்ற நிகழ்வில், ஒரே நேரத்தில் தேர்தல் என்ற முன்னெடுப்புக்கு மீண்டும் இடையூறு ஏற்படும்.ஒரே தேர்தல் என்பது தேசிய கட்சிகளுக்கும், மாநில கட்சிகளுக்கும் இடையே தேர்தல் களத்தில் சம நிலையிலான போட்டியை ஏற்படுத்தித் தராது.தேர்தல் ஆணையர் எண்ணிக்கை, தேர்தல் அதிகாரிகளின் எண்ணிக்கை, கட்டமைப்பு அதிகரிக்க வேண்டும் என்பதால் கட்டுக்கடங்காத செலவினத்தை ஏற்படுத்தும்.உள்ளாட்சி, சட்டசபை, லோக்சபா தேர்தலை நடத்த ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் செலவிட வேண்டிய நிதி சுமை தேர்தல் ஆணையத்திற்கு ஏற்படும். இது மத்திய, மாநில அரசு உறவுகளில் மட்டுமல்ல, மத்திய அரசுக்கே, கடுமையான விளைவு களை ஏற்படுத்தும் ஆபத்தான முயற்சி. உயர்நிலை குழு, தன் விசாரணையை நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லையென்றால், சட்டத்தின் வழி கொண்டு பொருத்தமான நடவடிக்கையை தி.மு.க., எடுக்கும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

'மாநில கட்சிகளை பலவீனப்படுத்தும்'

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' உயர்நிலைக்குழு செயலர் நிதேன் சந்திராவுக்கு பா.ம.க., தலைவர் அன்புமணி அனுப்பிய கடிதம்: கடந்த, 1972 வரை லோக்சபாவுக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில்தான் தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பின், 50 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதை சரிசெய்ய முடியவில்லை. 1994ல் எஸ்.ஆர் பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, அரசியலமைப்புச் சட்டத்தின் 356வது பிரிவை பயன்படுத்தி மாநில அரசுகளைக் கலைப்பது சாத்தியமற்றதாகி விட்டது.அரசுகள் கவிழ்வதையும், தேவையில்லாமல் தேர்தல் நடத்துவதையும் தவிர்க்க, தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் பெறும் ஓட்டுகளின் அடிப்படையில், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை நியமிக்கும் விகிதாச்சார பிரதிநித்துவ முறையே நிரந்த தீர்வாக இருக்க முடியும். இது ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கும் வலு சேர்க்கும்.லோக்சபா தேர்தலையும், சட்டசபை தேர்தலையும் ஒன்றாக நடத்தினால் தேசிய அளவிலான பிரச்னைகள் தான் முதன்மைப்படுத்தப்படும். இது, தேசிய கட்சிகளுக்கு கூடுதல் வலிமையையும், மாநில கட்சிகளுக்கு பலவீனத்தையும் ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

நரேந்திர பாரதி
ஜன 18, 2024 13:51

இந்த கடுதாசி எல்லாம் கடைசியா என்க போகணுமா அங்க போயிடும்...


duruvasar
ஜன 18, 2024 11:45

கருத்தைக் கேட்டால் உங்க கருத்தை சொல்லுங்கள். உயர்நிலை குழு தன் வேலையை நிறுத்திக்கொள்ள வேண்டும், திமுக சட்டத்தை நாடும் என மிரட்டல் விடுவது கருத்தாகாது. இதன் பெயர் அடாவடித்தனம்.


M.P.Pillai
ஜன 18, 2024 10:54

Regional parties will not agree as the INDI group is formed only against the BJP. In states where Congress is strong or the main opposition, congress has to put candidates against INDI group local partners in the state elections and common candidates in central elections which will confuse the people in case of common election at state and center levels. Also when the INDI group forms government at the center, it has to be a coalition government and each minister will be from different local parties. They will follow instructions from their regional party chief and not to the Prime minister which makes the central government weak. Allocation of projects will also be partial and may not be in the national interest. One way to overcome this issue should be that the central ministers should be only one party, the national party, and others to support and have a say in policy decisions.


karunamoorthi Karuna
ஜன 18, 2024 07:55

ஒரே கட்சி ஒரே குடும்பம் என்று அரசியல் கம்பெனி நடத்தும் திருட்டு திமுக குடும்பம் அழிந்து விடும்


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜன 18, 2024 07:53

இதற்கு மாற்றாக ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, மத்திய பாராளுமன்ற தேர்தலை பிப்ரவரி மாதத்திலும், அதை தொடர்ந்து, அனைத்து மாநில சட்டசபை தேர்தல்களை மொத்தமாக அதே ஆண்டு ஜூன் மாதம் ஒருமுறையும் நடத்தலாம். மத்தியில் புதிய அரசு ஏப்ரல் முதல் நாளில் இருந்தும், புதிய மாநில அரசுகள் ஜூலை முதல் நாளில் இருந்தும் ஆட்சியை துவங்கலாம். இடையில் ஆட்சி எந்த ஆட்சி கவிழ்ந்தாலும், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆயுட்காலம் இருந்தால் மாற்று ஆட்சி அமைக்க வாய்ப்பும், அதற்கு குறைவான ஆயுள் அல்லது ஆட்சி அமைக்க இயலாத பட்சத்திலும் அடுத்த தேர்தல் நாள் வரை ஜனாதிபதி அல்லது கவர்னர் ஆட்சியை அமல் படுத்தலாம்.


GMM
ஜன 18, 2024 07:48

ஒரே நாடு, ஒரே தேர்தல் சுதந்திரமான, நேர்மையான தேர்தலுக்கு எப்படி எதிரானது? ஒரு முறை உள்ளாட்சி, சட்ட பேரவை, பாராளுமன்றம் முன்கூட்டி கலைத்து தான் ஆக வேண்டும். தேசிய மாநில கட்சிக்கு சம நிலை போட்டி எதற்கு? மாநிலம், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தான் சம நிலை தேவை. உயர் நிலை குழு தன் விசாரணையை நிறுத்த வேண்டுமாம். மாவட்டம் போதும். காங்கிரஸ் உருவாக்கிய மொழி வாரி மாநிலங்கள் தேவையில்லை? வரி செலுத்தும் மக்களுக்கு மட்டும் பாராளுமன்ற வாக்கு. இருந்தால் விகிதாசார முறை பாட்டாளி ஏற்குமா? (உச்ச நீதிமன்றம் பொம்மை வழக்கில் 356 சட்ட பிரிவை அரசியல் கோணத்தில் பார்க்கும் முன் தேசிய பாதுகாப்பு விஷயத்தில் மாநில பங்கை பார்க்க வேண்டும். சில மாநிலங்களில் ஊழல், அதிகார வெறி தலைவிரித்து ஆடுகிறது. இவைகளுக்கு 356 சட்ட பிரிவு தேவை)


J.V. Iyer
ஜன 18, 2024 06:09

திராவிட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தால் அது மக்களுக்கு நல்லதாகத்தான் இருக்கும். அவர்கள் ஆதரித்தால், அவர்களுக்கு பணம் சுரண்ட ஏதுவாக இருக்கும். இதுதான் நிதர்சனம். இன்றையநிலை.


ramani
ஜன 18, 2024 05:06

ஒரே நாடு ஒரே தேர்தல் வரவேண்டும். திமுக எதிர்க்கிறது என்றால் அதில் நல்லது இருக்கிறது என்று அர்த்தம்


வெகுளி
ஜன 18, 2024 04:51

அடடே திமுக எதிர்க்குதா? ... அப்படியென்றால் சந்தேகமே இல்லாமல் இது நாட்டுக்கு தேவையான நல்ல திட்டம்தான்... உடனே அமல்படுத்துங்க...


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி