உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கைகளை அவருக்கே அனுப்ப டாக்டர்கள் முடிவு

 ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கைகளை அவருக்கே அனுப்ப டாக்டர்கள் முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: “எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, டாக்டர்களுக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையை, அவருக்கே அனுப்பும் போராட்டம் நடைபெறும்,” என, அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக்குழுத் தலைவர் பெருமாள் பிள்ளை தெரிவித்தார்.

இது குறித்து, அவர் கூறியதாவது:

அ.தி.மு.க., ஆட்சியில் இருந்து, ஊதிய உயர்வு, காலமுறை பதவி உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி வருகிறோம். அப்போது, எதிர்க்கட்சி தலைவராக இருந்த முதல்வர் ஸ்டாலின், 2020 டிச., 9ம் தேதி, அரசு டாக்டர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டார். மேலும், தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார். மத்திய அரசில் பணியாற்றும் எம்.பி.பி.எஸ்., டாக்டர், நான்கு ஆண்டுகளில் பெறும் ஊதிய உயர்வை, தமிழக அரசு டாக்டர்கள் 15 ஆண்டுகள் கழித்தே பெறுகின்றனர். இது போன்ற கோரிக்கைகளுக்கு ஸ்டாலின் ஆதரவு தெரிவித்தார். ஆனால், இன்றுவரை அது நிறைவேற்றப்படவில்லை. எனவே, எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கைகளை, அவருக்கே அனுப்பும் போராட்டத்தை நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 19, 2025 09:43

காமெடி மன்னரின் வெளியீடுகளை அவருக்கே அனுப்புவீங்களா அப்போ சனாதனத்தை கொசுவை ஒழிப்பது போல ஒழிப்பேன் ன்னு சொன்ன வெளியீடு


V RAMASWAMY
டிச 19, 2025 08:21

Paying back in the same coin? Very good. They need to learn lessons from ABC...


Barakat Ali
டிச 19, 2025 07:51

பேனாவுக்கு சிலை.. இறந்த தலைவர் பெயரில் திட்டங்கள்.. இப்படியெல்லாம் மாய்மாலம் செஞ்சு மீண்டும் ஆட்சிக்கு வரவே எங்களுக்கு நேரம் சரியா இருக்கு.. தமிழகத்தின் கடனளவு உயர்ந்த எங்களுக்கு என்ன நஷ்டம்? டாக்டர்களின் குறைகள் பத்தி எங்களுக்கென்ன கவலை??


அருண் பிரகாஷ் மதுரை
டிச 19, 2025 07:32

இப்படி அவசரப்பட்டால் என்ன அர்த்தம்.. அடுத்த தேர்தல் அறிக்கை தயாராகிக் கொண்டு உள்ளது.. கொஞ்சம் பொறுங்கள்.. அதில் உங்கள் கோரிக்கை நிச்சயம் இடம்பெறும்..


Balaa
டிச 19, 2025 07:06

நாளை திமுக ஆதரவு மருத்துவர்கள் மாற்று அறிக்கை வெளியிடுவார்கள். முதல்வருக்கு கூடிய விரைவில் அரசு மருத்துவ சங்கம் ஒரு பாராட்டு விழா நடத்தும்.‌ தலை குனியும் தமிழகம்.


Balaa
டிச 19, 2025 07:03

தேர்தல் நெருங்கும் சமயத்தில் சில்லறையாக சில சலுகைகள் கொடுத்து மருத்துவர்கள் வாயை அடைத்து விடும் இந்த அரசு.‌


சாமானியன்
டிச 19, 2025 06:39

இந்த விஷயத்தில் இரண்டு கருத்துக்கள் புரிகின்றன. முதலாவதாக மக்கள் தவறுதலாக திமுகவிற்கு வாக்களித்து ஏமாந்தது. நாலரை வருடம் பொறுமையாக இருந்தது. இரண்டாவது அவர் தங்களது இன்றைய கோரிக்கைகளை ஏற்பார் என இன்னமும் நம்புவது.


D.Ambujavalli
டிச 19, 2025 05:59

அவர் எதிர்க்கட்சியாக அளித்த வாக்குறுதிகளைக் கையோடு எழுதி வாங்கிக்கொண்டிருக்க வேண்டும். Manifesto என்பது தேர்தல் முடிந்ததும் குப்பைக்கூடைக்குப் போய்விடும். அவர் சொன்னது அவருக்கு, முதல்வர் நாற்காலியில், அதுவும் வெள்ளி சிம்மாசனத்தில், அமர்ந்த நிமிஷமே மறந்துவிடும் என்பது தெரியாதா ?


Senthil Arun Kumar D
டிச 19, 2025 03:25

இவ்வளவு நாள் தூங்கிட்டு இருந்தீர்களா டாக்டர்? இன்னும் நாலு மாசம் தான் இருக்கு இந்த விடியா ஆட்சி முடிவதற்கு. இப்ப போராடுனீங்கன்னா உங்க வோட்டு கிடைக்கும்னு எல்லா கோரிக்கைகளையும் நிறைவேத்தி தருவேன்னு சொல்லிடுவாரு நம் முதல்வர். அப்படித்தானே? நல்லா திட்டம் போடறீங்க doctor.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை