உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஊதிய உயர்வு வழங்க கோரி 11ல் டாக்டர்கள் பாதயாத்திரை

ஊதிய உயர்வு வழங்க கோரி 11ல் டாக்டர்கள் பாதயாத்திரை

சென்னை:ஊதிய உயர்வு வழங்கக்கோரி, சேலத்தில் இருந்து சென்னை வரை பாதயாத்திரை நடத்த உள்ளதாக, அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக்குழு தலைவர் பெருமாள் பிள்ளை தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:அரசாணை, 354ஐ அமல்படுத்தக்கோரி, அரசு டாக்டர்கள் போராடி வருகிறோம். பணியில் சேரும் போது, 56,100 ரூபாய் என, அடிப்படை ஊதியம் வழங்கப்படுகிறது. இதனால், மத்திய அரசு டாக்டர் ஒருவர், நான்கு ஆண்டுகளில் பெறும் ஊதியத்தை, மாநில அரசு டாக்டர்கள், 15 ஆண்டுகள் கழித்து தான் பெற முடிகிறது. மத்திய அரசு டாக்டர், 13 ஆண்டுகளில் 1.23 லட்சம் ரூபாய் பெறுகிறார். மாநில அரசு டாக்டர், 86,000 ரூபாய் தான் பெற முடிகிறது.எனவே, மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி, சேலம் மேட்டூரில் இருந்து சென்னை நோக்கி, வரும் 11ம் தேதி டாக்டர்கள் பாதயாத்திரை நடத்த உள்ளோம். இந்த பயணத்தின் போது, மக்களை சந்தித்து எங்களது கோரிக்கைகள் குறித்து விளக்கம் அளிப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ