உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தவறான தகவலை நம்பாதீர்! சிருங்கேரி மடம் அறிவிப்பு

தவறான தகவலை நம்பாதீர்! சிருங்கேரி மடம் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'சிருங்கேரி சாரதா பீடத்தின் மடாதிபதி புகைப்படத்துடன், சமூக வலைதளங்களில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் குறித்து, சுவாமிஜி தவறாக கூறியதாக பரப்பப்படும் தகவலை, பக்தர்கள் நம்ப வேண்டாம்' என, மடத்தின் நிர்வாகம் அறிவித்துள்ளது.மடம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:அயோத்தியில் பகவான் ராமருக்கு கோவில் கட்டப்பட்டு, பிராண பிரதிஷ்டை நடக்க இருப்பது, அனைத்து ஆஸ்திகர்களுக்கும் மகிழ்ச்சி தரும் விஷயம். இந்த நேரத்தில், நம் தர்மத்தை விரும்பாத சிலர், www.dainikjagran.comஎன்ற சமூக வலைதளம் வழியே, தக்சின்மன்யா சிருங்கேரி சாரதா மடத்தின் பீடாதிபதி, ஜகத்குரு சங்கராச்சார்யா ஸ்ரீ பாரதி தீர்த்த மகா சுவாமிஜி புகைப்படத்துடன், சிருங்கேரி சங்கராச்சாரியா சுவாமிகள், ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு எதிரான கருத்துக்களை கூறியதாக தகவல் பரப்பி உள்ளனர்.சிருங்கேரி சங்கராச்சாரியா சுவாமிகள், இது போன்ற தகவல் எதையும் வெளியிடவில்லை. இது, முற்றிலும் தவறான பிரசாரம். எனவே, ஆஸ்திகர்கள் இதை நம்ப வேண்டாம். நம் மடத்தின், www.sringeri.net அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வரும் தகவல்களை மட்டும் கவனத்தில் கொள்ளவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி