உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அணைகளில் வறட்சி நீர் மின் உற்பத்தி சரிவு

அணைகளில் வறட்சி நீர் மின் உற்பத்தி சரிவு

சென்னை:நீலகிரி, சேலம், ஈரோடு, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில், மின் வாரியத்திற்கு, 2,321 மெகாவாட் திறனில், 47 நீர் மின் நிலையங்கள் உள்ளன. அவற்றுக்கு அருகில் உள்ள அணைகளில் மழை காலங்களில் தண்ணீர் தேக்கப்பட்டு, மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்தது. இதனால், அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகம் இருந்தது. அந்த தண்ணீரை பயன்படுத்தி, தினமும் சராசரியாக, 750 - 1,000 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது, தண்ணீர் வேகமாக காலியாகி வருவதால், 100 மெகாவாட்டிற்கு குறைவாகவே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை