உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈ.டி., சோதனையா? போலீஸ் மறுப்பு!

ஈ.டி., சோதனையா? போலீஸ் மறுப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், அமலாக்கத்துறை சோதனை நடத்த இருப்பதாக, வெளியான தகவல் வதந்தி என, போலீஸ் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.சமீபத்தில், சென்னையில், 'ஓசன் குரூப்' நிறுவனத்துக்கு சொந்தமான ஐந்து இடங்களில், அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி, 450 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், 33 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். அந்நிறுவனம், சென்னை போலீசாருக்கு லஞ்சம் தந்ததாக புகார் கூறப்பட்டது. இதனால், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்த இருப்பதாக தகவல் வெளியானது.இதற்காக, கமிஷனர் அலுவலக நுழைவு வாயில்கள் மூடப்பட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால், அமலாக்கத்துறை சோதனை என்பது வதந்தி எனவும், போலீசார் யாரும் அந்நிறுவன புகாரில் சிக்கவில்லை எனவும், சென்னை போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை