உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை!

அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வேலூர்: வேலுார் மாவட்டம் பள்ளிக்குப்பம் நடு மோட்டூர் பகுதியில் உள்ள தி.மு.க., நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதேபோல், காட்பாடி காந்தி நகரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலின் போது வேலூர் தொகுதியில் தி.மு.க., வேட்பாளராக துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=n18spkcx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது, கதிர் ஆனந்துக்கு நெருக்கமான தி.மு.க., பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் அவரது உறவினர் தாமோதரன் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, கதிர் ஆனந்த் வாக்காளர்களுக்கு ரூ.11 கோடி கொடுப்பதற்காக, இவர் வீட்டில் பணம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த வழக்கில், இன்று (ஜன.,03) வேலுார் மாவட்டம் பள்ளிக்குப்பம் நடு மோட்டூர் பகுதியில் உள்ள தி.மு.க., நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மூன்று கார்களில், ஆறு அதிகாரிகள் பலத்த பாதுகாப்பு உடன் சோதனை நடத்தினர். அதேபோல், காட்பாடி காந்தி நகரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் மற்றும் தி.மு.க., எம்.பி., கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்த சென்றனர். ஆனால் வீடு பூட்டப்பட்டு இருந்ததால், வெளியே 4 மணி நேரமாக காத்திருந்தனர். துணை மேயர் சாவி கொண்டு வந்து கொடுத்ததால், 6 மணி நேர காத்திருப்புக்கு பிறகு அமலாக்கத்துறையினர் சோதனையை துவக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

xyzabc
ஜன 05, 2025 06:23

தி மு க பிரமுகர்கள் இல்லம் ஒரு சுரங்கம். அலிபாபாவின் குகை. ED இங்கு நிறைய நேரத்தை ஒதுக்க வேண்டும். அப்பா - மகன் ஜோடி திருடர்கள் நிறையவே உள்ளனர். மக்கள் இதை எல்லாம் மறந்து ரூ 200கு வோட்டை போடுவார்கள்


MP.K
ஜன 04, 2025 14:36

அமலாக்கத்துறை சும்மா கணக்கு காட்ட சோதனை நடத்துகிறது.


sankaranarayanan
ஜன 03, 2025 18:54

கன்னத்தில் முத்தமிட்டார் என்று சொல்லுமிடத்தில் கன்னத்தில் இவர் கையை வைத்திருப்பதில் நோக்கம் என்னவாக இருக்கும் இனி? கப்பலே கவிழ்த்தாலும் நான் கோபாலபுரத்து விசுவாசி என்றெல்லாம் சொன்னவர் இப்படி அவர் கன்னத்தில் கை வைக்கலாமா இப்போது என்ன ஆயிற்று பொறுத்திருந்து பார்க்கலாமே...


sankaranarayanan
ஜன 03, 2025 17:44

கோபாலபுரத்து விசுவாசிக்கு இனி கோவிந்தா கோவிந்தா என்றே சொல்லிட்டுக்கொண்டு அடிபிரதக்ஷ்ணம் செய்யலாமே


ponssasi
ஜன 03, 2025 16:25

அமலாக்கத்துறை ஏன் வந்தது என மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும். இங்கெல்லாம் பணத்தை பதுக்கினார், இதையெல்லாம் முறைகேடாக சம்பாதித்தார், இந்த சொத்துகளையெல்லாம் சட்டத்திற்கு புறம்பாக சம்பாதித்து வாங்கினார் என விளக்கமளிக்கவேண்டும். அதைவிடுத்து ஏன் வந்தார்கள், என்ன எடுத்து சென்றார்கள் என எதையும் சொல்லுவதில்லை


Sabesan
ஜன 03, 2025 14:19

தி. மு. க விற்காக குரல் கொடுக்கும் தங்களுடைய நிர்பந்தம் புரிகிறது. ஆனாலும் இப்படி திருடர்களுக்கு முட்டுக்கொடுக்க தேவையில்லை. உஷார் உங்கள் வீட்டிலேயே கையை வைப்பார்கள்.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 03, 2025 14:08

கதிர் ஆனந்த் வீட்டில் இல்லை. இது கூடத் தெரியாமல் ரெயீடுக்கு போன அதிகாரிகளின் அறிவின் மீது சந்தேகம் வருகிறது. யார் வீட்டிற்கு ரெயிட் போறோமோ அவர் வீட்டில் இருக்காரா என்று அவருக்குத் தெரியாமல் இ டி ஆபீஸரகள் தெரிந்து கொண்டு போக வேண்டாமா? இங்கே 2, 3 பேர் என்னை விமர்சிக்கிறார்கள். பிரபலமடைகிறேன். மகிழ்ச்சி. நன்றி. என் கருத்தை எதிர் கொள்ள புத்தி இல்லாதவன் என்னை விமர்சிக்கிறான். அவனுக்கு வேறு எதுவும் தெரியாது


venugopal s
ஜன 03, 2025 11:32

வழக்கம் போல் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி விட்டு கட்டை விரலை சப்பிகொண்டு வந்து விடுவார்கள்!


M Ramachandran
ஜன 03, 2025 11:15

துறை மகனுக்கு ஆனந் என்று பெயர் வைத்து ஆனந்தித்தார். இப்பொஅ என்னாடா வென்றால் அரசு அதிகாரிகள் வேண்டா விருந்தாளிகளாக வந்த ஆனந்தத்தின் ஆனந்தத்தை கெடுக்கிறார்கள்


Shekar
ஜன 03, 2025 11:08

இது எந்த துரைமுருகன் மகன் வீட்டில். மரு இருக்கிறவர் வீட்டிலா?, மரு இல்லாதவர் வீட்டிலா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை