உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருமண மது விருந்தில் இன்ஜினியர் கொலை

திருமண மது விருந்தில் இன்ஜினியர் கொலை

திருநெல்வேலி: நெல்லை அருகே திருமண மது விருந்தில் இன்ஜினியர் குத்திக்கொலை செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்டம் சுரண்டையை அடுத்த பரங்குன்றாபுரத்தை சேர்ந்த முருகையா மகன் காளிதாஸ்(20). இன்ஜினியரிங் டிப்ளமோ படித்துவிட்டு, காண்ட்ராக்டர் ஒருவரிடம் வேலை பார்த்து வருகிறார். இவரது நண்பர் ஒருவரின் திருமணத்திற்காக, நேற்று முன்தினம் இரவில் அதே ஊரில் நடந்த மதுவிருந்தில் பங்கேற்றார். ஸ்டாலின் என்பவருக்கும் இவருக்கும் கோயில் கொடை திருவிழா தொடர்பாக முன்விரோதம் இருந்தது. மது அருந்திய ஸ்டாலின், காளிதாசுடன் தகராறு செய்து, அவரை கத்தியால் குத்தினார். இதில் காளிதாஸ் இறந்தார். சுரண்டை போலீசார் ஸ்டாலினை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ