மேலும் செய்திகள்
செயற்கை உறுப்புகளுக்கான 'மனசிலாயோ' தொழில்நுட்பம்
15-Dec-2024
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
01-Dec-2024
மிக அதிகமாக ஆங்கிலம் பேசும் மற்றும் பயன்படுத்தும் நாடுகளில் ஒன்றாக இருந்தாலும், நம் நாட்டில் உள்ள 140 கோடி பேரில் 2.65 கோடி பேர் மட்டுமே ஆங்கிலத்தில் திறமையானவர்களாக உள்ளனர்.ஆங்கிலப் புலமை குறைவால் நேர்முகத் தேர்வுகள் மற்றும் அலுவலகப் பணிகளில் இளைஞர்கள் தடைகளை எதிர்கொள்கின்றனர்; முன்னேற்றம் தடைபடுகிறது. ஆங்கில பயிற்சி வகுப்புகள் இருந்தாலும், நேரடியாக சென்று படிக்க பலருக்கும் தயக்கம்; இதை தவிர்க்க ஆன்லைனில் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆங்கிலப் பயிற்றுவிப்பாளர்களை கொண்ட 'ஸ்டார்ட் அப்' துவங்கப்பட்டுள்ளது. 'மை சிவி' (My Sivi) என்பது ஆங்கில மொழிக் கற்றலுக்கான செயற்கை நுண்ணறிவுத்தளமாகும். ஆங்கிலம் தந்த அச்சம்
உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ், சிவம் குப்தா என்பவரின் பூர்வீகம். அரசுப்பள்ளியில் படித்தார். டெல்லி பல்கலையில், கணிதத்தில் பி.எஸ்.சி.,(ஹானர்ஸ்) படிப்பதற்காகச் சேர்ந்தார். தலைசிறந்த பல்கலையில் சேர்வது, அவரது கனவு. ஆனால், அங்கு சென்று படிக்கும்போது ஆங்கிலத்தில் எப்படி உரையாடுவோம் என்ற அச்சத்தில் இருந்தார். கணினி அறிவியல் மற்றும் தரவு தொடர்பாக ஐ.ஐ.டி., காரக்பூரில் எம்.டெக்.,கில் சேர்ந்தபோதுகூட, ஆங்கில உரையாடல் மீதான அவரது அச்சம் போகவில்லை.கடந்த 2017ல் வேலை தேடும்போது, நேர்காணல்கள் ஆங்கிலத்திலேயே இருந்தன. அப்போதுதான் ஆங்கிலத்தில் புலமை ஏற்படுத்த 'ஸ்டார்ட் அப்' துவங்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது.தொழில் முனைவோர் ஆக விரும்பிய அதற்கான சரியான வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. கொரோனாவால், கொரோனா மக்கள் தங்கள் வீடுகளின் எல்லைக்குள் இருக்க வேண்டியிருந்தது. இதையே வாய்ப்பாக மாற்றினார் குப்தா. எளிய பயன்பாடு
மெஷின்களுடன் மட்டும் பயனர்கள் ஆங்கிலம் பேசும்படியாக அமைத்தால் வெற்றிகரமாக இருக்காது; மனிதர்களுடன் உரையாடி சந்தேகங்களை போக்கும் வகையில் இருந்தால் தான் வெற்றிகரமாக அமையும் என்று தீர்மானித்து 'ஸ்டார்ட் அப்' துவங்கினார்.ஏ.ஐ., ஸ்டார்ட் அப் பிரிமியம் மாடலில் இது இயங்குகிறது. பயனர்கள் தினமும் 30 நிமிடங்களுக்கு பயன்பாட்டை இலவசமாகப் பயன்படுத்தலாம். அதிகமாக பயன்படுத்த நினைத்தால், நிறுவனம் வாரத்திற்கு 199 ரூபாய்; மாதத்திற்கு 399 ரூபாய்; மூன்று மாதங்களுக்கு 699 ரூபாய், வருடத்திற்கு 1,399 ரூபாய் வசூலிக்கிறது. 'ஸ்டார்ட் அப்' தொடங்கப்பட்டதிலிருந்து 10 லட்சத்துக்கும் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கிறது.இதில் 30,000க்கும் அதிகமானோர் கட்டணம் செலுத்தி படிப்பதால் ஆண்டுக்கு 2 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருடாந்திர வருவாயைப் பெறுகிறது. இணையதளம்: www.mysivi.ai.உங்கள் சந்தேகங்களுக்கு: இ-மெயில்: Sethuraman.gmail.com; அலைபேசி: 98204 51259 இணையதளம் www.startupandbusinessnews.com - சேதுராமன் சாத்தப்பன் -
15-Dec-2024
01-Dec-2024