உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 40 எம்.பி.,க்கள் இருக்கீங்க... என்னதான் பண்றீங்க? எடப்பாடி சரவெடி

40 எம்.பி.,க்கள் இருக்கீங்க... என்னதான் பண்றீங்க? எடப்பாடி சரவெடி

சென்னை; எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள் என்று எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவின் விவரம் வருமாறு; பூம்புகார் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை ஒரு சில நாட்களுக்கு முன் 37 மீனவர்களுடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதன் காரணமாக பூம்புகார் துறைமுகத்தில் மீனவர்கள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தன் தந்தை நாணய வெளியீட்டு விழாவிற்கு உங்களின் ஒரு வார்த்தை அழைப்பை ஏற்று, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் வந்தார். ஒருவரின் மகிழ்ச்சிக்காக நடைபெற்ற கார்பந்தயத்திற்கு ஒரே நாளில் மத்திய தடையில்லா சான்றிதழ் பெற்றீர்கள்.நடுக்கடலில் எழுதாத பேனாசிலை வைக்க மத்திய தடையில்லா சான்றிதழ் பெற்ற அதிகாரம் மிக்க நீங்கள், ஏன் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் பிடிபடும்போதும், கொல்லப்படும் போதும், உளமார்ந்த உறுதியான நடவடிக்கை எடுக்காமல், பெயரளவிற்கு கடிதம் மட்டுமே எழுதுகின்றீர்கள்? தமிழக மீனவர் பிரச்சனையை தீர்க்க மத்திய அரசின் உறுதியான நடவடிக்கையை விடியா திமுக அரசால் நிர்பந்தித்து பெற முடியவில்லை. தனக்கோ, தன் குடும்பத்திற்கோ தேவையென்றால், ஒரு நொடியில் சாதித்துக் கொள்ளும் நீங்கள் தமிழக மீனவர்களுக்கோ, தமிழக நலனுக்கோ பாதிப்பு ஏற்படும்போது ஏனோ தானோ என்று கடிதத்துடன் நிறுத்திக்கொள்கிறீர்கள். எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள். இனியாவது விரைந்து செயல்பட்டு, மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து இலங்கை சிறையில் அடைபட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுவிக்க முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அவர் தமது எக்ஸ் தள பக்கத்தில் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Rajan
செப் 24, 2024 05:45

எதிர் கட்சியாக இருக்கும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று முதலில் விளக்கவும். வெற்று அறிக்கை வெளியிடுவது தவிர மக்களுக்காக சட்டசபையில் என்ன குரல் கொடுத்துள்ளீர்கள்? வரியும், விலைவாசி உயர்வு பற்றி எறியும் போது சும்மா உதார் விடுவதை நிறுத்தி, ஆக்க பூர்வமான செயல்களில் இறங்கினால் தான், 2026ல் கட்சி பிழைக்கும்


Ramesh Sargam
செப் 23, 2024 22:24

40 எம்.பி.,க்கள் இருக்கீங்க... என்னதான் பண்றீங்க? என்ன எடப்பாடி இப்படி கேட்டுவிட்டீர்கள்? கூட்டத்தொடரின்போது டெல்லிக்கு செல்கிறார்கள், தொடர் ஆரம்பித்தவுடன் ரகளை செய்துவிட்டு, நேராக வளாகத்தில் உள்ள கேன்டீனுக்கு சென்று வயிறுமுட்ட தின்றுவிட்டு ரூமுக்கு சென்று தூங்குகிறார்கள். அடுத்த நாள் மீண்டும் அதே ரகளை, அதே வெளிநடப்பு, அதே கேன்டீனில் உணவருந்துதல், பிறகு தூக்கம். பாவம் எவ்வளவு கஷ்டம்? அவர்களைப்போய் என்னதான் பண்றீங்க? என்று கேள்வி கேட்கலாமா..?


Ramesh Sargam
செப் 23, 2024 20:44

உக்ரைன் ரஷ்யா போர் முடிவுக்கு வந்தாலும் வரும். ஆனால் இந்த மீனவர்கள் பிரச்சினை முடிவுக்கு வரவே வராது.


hariharan
செப் 23, 2024 19:02

கடிதம் எழுதி கையெழுத்து போடுவது பேனாவினால் தானே.


முக்கிய வீடியோ