உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நெல் கொள்முதல் குறித்து இபிஎஸ் சொன்னதெல்லாம் புளுகு மூட்டைகள்தான்: முதல்வர் ஸ்டாலின்

நெல் கொள்முதல் குறித்து இபிஎஸ் சொன்னதெல்லாம் புளுகு மூட்டைகள்தான்: முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''நெல் மூட்டைகள் கொள்முதல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ்சும், அவரது கட்சியினரும் சொன்னவையெல்லாம் புளுகு மூட்டைகள்தான்'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அவரது கடிதம்: புயல் சின்னமும், பெருமழையும் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களை அச்சுறுத்துகிற நிலையில், வடகிழக்குப் பருவகால இயற்கையின் தன்மையை உணர்ந்து, சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இயற்கைப் பேரிடர் சூழல்களில் எதிர்க்கட்சியினரும் களமிறங்கி மக்கள் நலப் பணிகளை ஆற்றுவதுதான் நல்ல ஜனநாயகத்திற்கான அடையாளம்.

நிவாரணப் பணிகள்

2018ம் ஆண்டு கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டபோது, அப்போது ஆட்சியிலிருந்த அதிமுகவின் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் ஆகியோர் சாவகாசமாகக் களத்திற்கு வந்த நிலையிலும், எதிர்க்கட்சியான திமுகதான் புயல் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில், பொழுது விடிவதற்கு முன்பாகவே களமிறங்கி நிவாரணப் பணிகளை மேற்கொண்டது. இப்போதுள்ள எதிர்க்கட்சித் தலைவர், பருவமழைக் காலத்திலும் அரசியல் களத்தில் ஏதாவது அறுவடை செய்ய முடியுமா என்றுதான் செயல்படுகிறாரே தவிர, ஆக்கப்பூர்வமாகவோ மக்களுக்கு உறுதுணையாக உண்மையாகவோ எதையும் செய்யும் எண்ணமில்லாமல் இருக்கிறார்.

புளுகு மூட்டைகள்

நெல் மூட்டைகள் கொள்முதல் குறித்து எதிர்க்கட்சித் தலைவரும், அவரது கட்சியினரும் சொன்னவையெல்லாம் புளுகு மூட்டைகள்தான் என்பதை திராவிட மாடல் அரசின் தொடர் செயல்பாடுகள் நிரூபித்துவிட்டன. பொய்களையும், அவதூறுகளையும் புறந்தள்ளி, நாம் தொடர்ந்து மக்களுக்காகப் பணியாற்றிக் கொண்டே இருப்போம். அத்துடன், ஜனநாயகம் வழங்கியுள்ள மக்களின் அடிப்படை உரிமையான வாக்குரிமையைப் பாதுகாக்க வேண்டிய பெருங்கடமையும் பொறுப்பும் திமுகவுக்கு உள்ளது. சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தைத் தமிழகத்தில் அடுத்த வாரத்தில் நடைமுறைப்படுத்தப் போவதாகத் இந்தியத் தலைமைத் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. சட்டசபை தேர்தலை எதிர்கொள்கின்ற பீஹார் மாநிலத்தில் 65 லட்சத்திற்கும் அதிகமான மக்களின் வாக்குரிமையை இதே சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் மூலம் தேர்தல் கமிஷன் பறித்திருப்பதைச் சுட்டிக்காட்டி, தமிழகத்திலும் அதே குறுக்குவழியைப் பின்பற்ற மத்திய பாஜ அரசு தனது கைப்பாவையாகத் தேர்தல் கமிஷனை பயன்படுத்த முயற்சிக்கிறது என்பதை திமுகவும், இண்டி கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன.

தப்புக்கணக்கு

பட்டியல் இனத்தவர், சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்டவர்களின் பெயர்களை சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் மூலமாக, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி விட்டால் பாஜவும் அதன் கூட்டாளியான அதிமுகவும் வெற்றிபெற்றுவிடலாம் எனக் கணக்கு போடுகிறார்கள். அதாவது, நேரடியாகத் தேர்தல் களத்தில் மக்களைச் சந்திக்கும் வலிமையில்லாதவர்கள், மக்களின் வாக்குரிமையைப் பறித்துவிட்டு வெற்றி பெறலாம் எனப் போடுகின்ற கணக்கு என்பது, தமிழகத்தை பொறுத்தவரை தப்புக்கணக்காகத்தான் ஆகும்.

தலைகுனியாது

மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் S.I.R. செயல்பாட்டில் கண்காணிப்பாக இருந்து திமுகவினர் கடமையாற்ற வேண்டும். எதிர்க்கட்சியான அதிமுக தனது சொந்தக் கட்சியின் உரிமைகளையே பாஜவிடம் அடகு வைத்துவிட்ட நிலையில், மக்களின் உரிமைகளைப் பற்றிக் கவலைப்பட அதற்கு நேரமிருக்காது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மக்களின் உரிமைகளைக் காக்க வேண்டியவர்கள் திமுகவினரும் தோழமைக் கட்சியினரும்தான். மக்கள் நலனையும் மாநில உரிமைகளையும் காக்கின்ற திமுக ஆட்சியில் தமிழகம் தலைகுனியாது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 59 )

Ramesh Sargam
நவ 01, 2025 07:47

அப்படி என்றால் அநேக செய்தித்தாள்களில் நெல் மழையில் அழுகும் படம் பிரசுரிக்கப்பட்டது எல்லாம் கூட புளுகா? , அந்த பதவிக்கு ஏற்றமாதிரி பேசவேண்டும். எப்பொழுதும் பொய் பேசினால் யார்தான் உங்களை மதிப்பார்கள்.


vijay
அக் 31, 2025 11:16

நீங்க எப்பவுமே உண்மை மட்டுமே பேசுவீங்கன்னு எங்களுக்கு தெரியும் சார், உங்க தேர்தல் வாக்குறுதிகள், நீட் தேர்வு ரத்து செஞ்சது, டாஸ்மார்க்கை இழுத்து மூடி, சாராய ஆலைகளையும் மூடியது, சொன்னபடி மாதாமாதம் மின்சாரக்கட்டணம் அமல்படுத்தியது, கட்டப்பஞ்சாயத்தை ஒழித்து, ரவுடியிசத்தை கட்டுப்படுத்தியது, நீங்கள் எதிர்கட்சியா இருக்கும்போது ஆதரவளித்த மக்களுக்கான பேச்சுரிமை சுதந்திரத்தை உங்கள் நாலரை ஆண்டுகள் ஆட்சியில் நிலைநாட்டி வருவது, பால் விலையை உயர்த்தாமல் படுத்தி மக்களான எங்களின் வயிற்றில் பால் வார்த்தது, ஊழலை ஒழிக்க எங்கள் பாசமிகு அண்ணன் 10 ரூபாய் பாலாஜி-யுடன் இணைந்து தாங்கள் ஊழலை ஒழித்து வருவது, மதச்சார்பின்மை மூலமாக அனைத்து மத சமுதாய மக்களுக்கும் பண்டிகை கால வாழ்த்துக்களை கூறி குஷியாக்கியது, முக்கியமா ஜாதியை ஒழித்தது என்று சொன்னதை செய்துமுடித்து, சொல்லாததையும் செய்து நம் மாநில மக்களுக்கு தாங்கள் வழங்கி வரும் நல்லாட்சி, திராவிட மாடல் ஆட்சியின் செயல்பாடுகள் உங்கள் மக்களுக்கு தெரிந்த உண்மையே அன்றி வேறு எதுவும் இல்லை அய்யா.


Madras Madra
அக் 27, 2025 12:35

திராவிட நாட்டின்...


Rajasekar Jayaraman
அக் 27, 2025 09:35

திராவிடம் அழிந்து ஒழியட்டும்.


suresh Sridharan
அக் 27, 2025 07:39

எடப்பாடி புழுகட்டும் அப்பாவும் மகனும் முதல்வர் துணை முதல்வர் இந்த நாள் அரை வருஷம் புளுகியது எத்தனை CM இதில் சகோதரி இவரும் பிறகு இவர்களுடைய மந்திரிகளும் திராவிட உலகத்தில் யாரும் இவ்வளவு பொய்கள் தமிழ்நாட்டில் உள்ள மக்கள் குடி குடி குடிகாரர்கள் நிறுத்தினால் மட்டுமே இந்த ஜென்மங்களை வெல்ல முடியும்


NACHI
அக் 26, 2025 23:31

இவரு அப்பப்ப கோமாவில் இருப்பார் போல..


panneer selvam
அக் 26, 2025 22:47

Stalin ji has confirmed there is no rain in Tamilnadu for the last 45 days . All paddy has been procured by government with out paying commission to local officials and party functionaries . So whoever says about rain damaged paddy are liars . Stalin ji is also against verification of voters list since if we allow special revision of voter list , then there will be no job for ghost voters . We need to protect their employment opportunities


D Natarajan
அக் 26, 2025 22:26

அரசியலில் இதெல்லாம் , பொய் சொல்லுவது சகஜமப்பா. நீட் ரஹஸ்யம் மாதிரி


theruvasagan
அக் 26, 2025 20:03

எடப்பாடி புளுகியவைகள் என்னன்ன. அவைகள் உண்மை நிலவரம் இல்லை என்பதற்கு நீங்கள் கொடுக்கும் ஆதாரங்கள் என்ன. ஆதாரம் இருந்தால்தானே கொடுக்க முடியும். பொத்தாம் பொதுவாக மறுப்பு தெரிவிப்பது பூசி.மெழுகும் வேலை.


Sundar R
அக் 26, 2025 19:05

எதிர்வரும் 2026 தேர்தலில் திமுகவோடு கூட்டணி சேருவார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை