உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  மாவட்ட காங்., தலைவர் பதவிக்கான மனு தாக்கலில் கோஷ்டி மோதல்

 மாவட்ட காங்., தலைவர் பதவிக்கான மனு தாக்கலில் கோஷ்டி மோதல்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில், காங்கிரஸ் மாவட்ட தலைவர் பதவிக்கான விருப்ப மனுக்கள் வாங்கும் நிகழ்வு, கடந்த இரு தினங்களாக கட்சியின் மேலிட பொறுப்பாளர் நரேஷ்குமார் தலைமையில் நடந்து வருகிறது. வடக்கு மாவட்ட தலைவருக்கான வேட்புமனு வாங்கும் நிகழ்வு நேற்று நடந்தது. இதில், 28 பேர் மனு தாக்கல் செய்தனர். அவர்களை, நரேஷ்குமார் தனித்தனியாக நேர்காணல் செய்தார். குமரன் என்பவரை அழைத்தபோது, அவரது ஆதரவாளர்கள், 'மாவட்ட தலைவர் குமரன் வாழ்க' என கோஷமிட்டனர். இதையடுத்து, விவசாய பிரிவு மாநில பொதுச்செயலர் வெங்கடேஷ் ஆதரவாளர்கள், 'விருப்ப மனு பெறுவதற்குள், எப்படி கோஷம் எழுப்பலாம்?' என கேட்டனர். இதனால், குமரன் மற்றும் வெங்கடேஷ் ஆதரவாளர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் நாற்காலிகளை வீசி எறிந்தனர். மேடையில் இருந்த, மேலிட பொறுப்பாளர் நரேஷ்குமார், இரு தரப்பையும் கூட்டரங்கை விட்டு வெளியேற்றினார். பின், நரேஷ்குமார் கூறுகையில், “தஞ்சாவூர் வடக்கு மாவட்ட காங்., தலைவர் பதவிக்கு விருப்ப மனு அளித்த 28 பேரில், ஆறு பேர் பரிந்துரைக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ''அவர்களில் ஒருவர், டிசம்பர் முதல் வாரத்தில், தலைவராக தேர்வு செய்யப்படுவார். அவர், ஐந்து ஆண்டுகள் மாவட்ட தலைவர் பதவியில் இருப்பார்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை