உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண சம்பவம்: சி.பி.ஐ., விசாரணை வருமா?

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண சம்பவம்: சி.பி.ஐ., விசாரணை வருமா?

சென்னை : கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து, 70க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் தொடர்பான வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுக்களின் மீது, சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது.கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து, 70க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இச்சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்கள், நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன.அ.தி.மு.க., நிர்வாகி இன்பதுரை சார்பில், மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி; பா.ம.க., பாலு சார்பில், மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா; பா.ஜ., வழக்கறிஞர் மோகன்தாஸ் சார்பில், வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் மற்றும் வழக்கறிஞர் மணி உள்ளிட்டோர் வாதாடினர். அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் வாதாடினார்.இரு தரப்பிலும், கடந்த செப்டம்பர் 19ல் வழக்கறிஞர்களின் வாதங்கள் முடிந்த நிலையில், தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில், இன்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

krishna
நவ 20, 2024 09:06

NEENGA VERA. ENGA KALLA SAARAAYAM KIDAIKKUM. EPPO 10 LATCHAM ROOVAA VAANGALAAM ENA ALAYUM NILAYIL DRAVIDA MODEL KUMBAL MAKKALAI KONDU VANDHULLADHU..


N Srinivasan
நவ 20, 2024 09:06

கொஞ்ச நாளைக்கு முன்னால் முதல்வர் அல்லது உதயநிதி கள்ளக்குறிச்சி போய் பார்க்க வேண்டும் என்று ஒரு தீர்ப்பு சொன்னாங்களே எப்படி எல்லோரும் அதற்கு மறந்து போய் விட்டோம் ????


Indhuindian
நவ 20, 2024 08:58

திராவிட மாடல் சி பி ஐ க்கு எதிரானது அவங்க கேட்க மாட்டாங்க சொந்த காசுலே யாரவது சூனியம் வெச்சுப்பாங்களா


Dharmavaan
நவ 20, 2024 08:31

இந்த சோம்பேறி நீதிபதிகளை திருத்துவது எப்படி யார் கேட்பது .மோடி இதற்கு சட்டம் இயற்ற வேண்டும்


G Mahalingam
நவ 20, 2024 08:29

கடந்த ஆறு மாதத்தில் வந்த தீர்ப்பு படி நீதி துறையையும் திமுக விலைக்கு வாங்கி விட்டது. இப்போதுதிமுக முன்னேற்ற கழக காவல் துறையும் நீதிமன்றமும் சேர்ந்து விட்டது. சாமானிய மக்கள் நீதி கேள்வி குறி.


சுந்தர்
நவ 20, 2024 07:51

நிகழ்வு எப்ப நடந்தது? தீர்ப்பு எப்ப சொல்றது? நாம் வாழ்வது AI காலத்தில். ம்ம்ம்... மாற்றம் வேண்டும்...


KUMARAN TRADERS
நவ 20, 2024 07:49

நீதிபதிகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தான் தீர்ப்பு சொல்வார்கள் அந்த சந்தேகமும் இல்லை பொன்முடியை விடிவித்த உச்சநீதி மன்றமே இப்படி நாட்டில் உள்ள நீதிமன்றங்கள் இப்படித்தான் இருக்கிறது


VENKATASUBRAMANIAN
நவ 20, 2024 07:41

இப்போதுதான் சிபிஐ வருமா என்று கேட்கிறார்கள். இனிமேல் சிபிஐ வந்தால் விசாரித்து தீர்ப்பு வருவதற்கு எவ்வளவு நாள் ஆகுமோ. இதுதான் நீதித்துறையின் சாதனை. விளங்கிடும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை