உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழுக்கு அவமரியாதை இழைத்தேனா; பொய்யான குற்றச்சாட்டு கூறுகிறார் முதல்வர்: கவர்னர் ரவி

தமிழுக்கு அவமரியாதை இழைத்தேனா; பொய்யான குற்றச்சாட்டு கூறுகிறார் முதல்வர்: கவர்னர் ரவி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : ''தவறான குற்றச்சாட்டுகளை அவசரகதியில் முதல்வர் அவர்கள் பொது வெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் நான் இருக்கிறேன்,'' என கவர்னர் ரவி கூறியுள்ளார்.சென்னை டிடி தமிழ் அலுவலகத்தில் நடந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தில் 'திராவிடம் ' என்ற வார்த்தை கொண்ட வரி விடுபட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவர்னர் ரவிக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் 'எக்ஸ் ' சமூக வலைளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.இது தொடர்பாக 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் கவர்னர் ரவி வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: முதல்வர் ஸ்டாலின் இன்று மாலையில் வெளியிட்ட வருத்தமளிக்கக் கூடிய பதிவு ஒன்றில், எனக்கு எதிராக இனவாத கருத்தைத் தெரிவித்து, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நான் அவமரியாதை இழைத்ததாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஒவ்வொரு விழாவிலும் நான் தமிழ்த் தாய் வாழ்த்தை முழுமையாக பாடுவேன் என்பதையும் அதை பக்திச்சிரத்தையோடும், பெருமையோடும், துல்லியமாகவும் பாடுவேன் என்பதும் அவருக்கு நன்றாகத் தெரியும். பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு பல்வேறு அமைப்புகளை நிறுவி தமிழ் மொழி மற்றும் அதன் பாரம்பரியத்தை தமிழகம் உள்பட இந்தியாவுக்கு உள்ளேயும், உலகின் பல நாடுகளிலும் பரப்புகிறது என்பதையும் முதல்வர் நன்றாக அறிவார். பிரதமர் மோடி ஐக்கிய நாடுகள் சபைக்கும் கூட தமிழை கொண்டு சென்றார்.ஒரு பெருமைமிகு இந்தியன் என்ற முறையில், நாட்டின் தொன்மையான, வளமான மற்றும் உயிர்ப்புமிக்க மொழியான தமிழை நாட்டின் பிற மாநிலங்களில் பரப்ப நான் ஏராளமான முயற்சிகளை செய்துள்ளேன். அதில், சமீபத்திய நடவடிக்கையாக வட கிழக்கு மாநிலத்தில் தமிழை பரப்ப அசாம் அரசின் ஒத்துழைப்புடன் கவுஹாத்தி பல்கல்கலைக்கழகத்தில் தமிழ் பட்டய படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.ஒரு கவர்னருக்கு எதிராக முதல்வர் இனவாதக் கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது. முதல்வரின் உயர் அரசியலமைப்புப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் உள்ளது.தனது இனவாத கருத்துக்கள் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை அவசரகதியில் முதல்வர் அவர்கள் பொது வெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் நான் இருக்கிறேன். இவ்வாறு அந்த பதிவில் ரவி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 64 )

சாண்டில்யன்
அக் 19, 2024 07:26

வழக்கம்போல் சப்பைக்கட்டு கட்டியிருக்கிறாரே


Rpalnivelu
அக் 19, 2024 02:28

திருட்டு த்ரவிஷன்களுக்கு குறிப்பாக தெலுகு முதல் குடும்பத்துக்கு தமிழ் ஒரு வியாபார மூலதனம். ஏமாந்த தமிழக சோணகிரிகளை வைத்து லட்ச கோடிகளை சுருட்டியது இப்படித்தான்.


Natarajan Ramanathan
அக் 19, 2024 01:35

தீயசக்தி அந்த பாடலின் நான்கு வரியை நீக்கினான். அப்போது ஏன் யாரும் கூப்பாடு போடவில்லை?


Jayaraman Easwaran
அக் 19, 2024 00:08

முதல்வரே, நீர் தமிழ் வம்சா வழியில் வந்தவரா அல்லது தெலுங்கரா?


சாண்டில்யன்
அக் 19, 2024 12:30

சென்னையில் கண்ணகி சிலையை பெயர்த்து எடுத்து பாதாள சிறையில் போட்டோம் சிவாஜிக்கு சிலை வைக்க கூடாதுன்னு சொல்லி கோர்ட்டு படியேறி அதை எடுத்துவிட்டுதான் ஓய்ந்தோம் தமிழர்கள் வெகு புத்திசாலிகள்ன்னு உலகுக்கே தெரிய படுத்தியிருக்கிறோமே இப்போ தெலுகு அது இதுன்னு பிதற்றுகிறோம் ஒரு தமிழன் ஏன் வரவில்லைன்னு ஆராய்ந்தோமா


சாண்டில்யன்
அக் 19, 2024 13:54

சென்னையில் சிலை வைத்தோம்


சாண்டில்யன்
அக் 19, 2024 15:01

சென்னையில் கண்ணகி சிலையை பெயர்த்து எடுத்து பாதாள சிறையில் போட்டோம் சிவாஜிக்கு சிலை வைக்க கூடாதுன்னு சொல்லி கோர்ட்டு படியேறி அதை எடுத்துவிட்டுதான் ஓய்ந்தோம் அவரென்ன தமிழனா என்ன? ஆனால் தெலுங்கு நடிகருக்கு சிலைவைத்து மகிழ்ந்தோம் இப்படியெல்லாம் தமிழர்கள் வெகு புத்திசாலிகள்ன்னு உலகுக்கே தெரிய படுத்தியிருக்கிறோமே இப்போ தெலுகு அது இதுன்னு பிதற்றுகிறோம் ஒரு தமிழன் ஏன் வரவில்லைன்னு ஆராய்ந்தோமா? "வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு"ன்னு நாம் பிரபலம்


RAAJ68
அக் 18, 2024 23:04

வெள்ள நிவாரணத்தில் ப்ளீச்சிங் போவதற்கு பதிலாக மைதா மாவை போட்டு பித்தலாட்டம் செய்யும் திமுகவினருக்கு எல்லாமே கைவந்த கலை


PDM
அக் 18, 2024 23:03

ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக மைதா மாவை போட்டு மக்களை முட்டாளாக்கி ஏமாற்று வேலை செய்யும் திமுகவினருக்கு தமிழ் தாய் வாழ்த்து பாடல் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை.


venugopal s
அக் 18, 2024 22:39

நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் கனடா நாட்டு அரசுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்க கனரா வங்கி வாசலில் நின்று ஆர்ப்பாட்டம் செய்த சங்கிகள் இங்கு வந்து தமிழக முதல்வரை கேலி செய்யத் தகுதியற்றவர்கள்!


ரெட்டை வாலு ரெங்குடு
அக் 22, 2024 08:34

உன்னோட சம்மந்தமே இல்லாத சங்கி உருட்டுக்கு என்னோட ஆழ்த்த அனுதாபங்கள். இப்போ திருட்டு திராவிடிய படம் ஓட்டிட்டு இருக்கு சம்மந்தமே இல்லாம சங்கிய பேசவேண்டிய வேலையில்லை


Duruvesan
அக் 18, 2024 22:38

அப்பாடி மேட்டர் கெடச்சிடுச்சி, இனி எவனும் சென்னை வெள்ளம், நாறுது, 4000 கோடி எதுவும் கேட்க மாட்டான்.


Kasimani Baskaran
அக் 18, 2024 22:37

ஒத்தை வரியை நீக்கி திராவிடனை விரட்டி விட்டார் கவர்னர். பாராட்டுக்ககள்.


சதிஷ்
அக் 18, 2024 23:34

நீங்கள் அப்போது தமிழ்நாட்டில் பிறக்கவில்லையா நண்பரே.


Indian
அக் 19, 2024 12:32

, அதன் இப்படி பேசுறார்


RAAJ68
அக் 18, 2024 22:34

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை சூரத்தோட பாடுவதே இல்லை கொலை செய்கிறார்கள் கேட்கவே ரசிக்கும் படியாக இல்லை முதலில் நன்றாக பாடுபவர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து அந்த மாதிரி நபர்களை மட்டுமே அரசு நிகழ்ச்சிகளில் பாடுவதற்கு அழைக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை