மேலும் செய்திகள்
கிட்னி திருட்டு புரோக்கர்கள் சென்னை புறநகரில் பதுங்கல்
1 hour(s) ago
பிரதமரை விமர்சித்து போஸ்டர்: நடவடிக்கை எடுக்காத போலீஸ்
2 hour(s) ago | 10
இளையான்குடி: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே முனைவென்றியில் தாழ்வாக தொங்கிய மின் கம்பி உரசியதில் விவசாயி பலியானார். முனைவென்றியைச் சேர்ந்த விவசாயி முத்து மகன் முனியசாமி 54. இவர் நேற்று வயலில் இருந்து நாற்றுக்கட்டுகளை மற்றொரு வயலுக்கு வாழை தோப்பு வழியாக தலைச்சுமையாக துாக்கிச்சென்றார். அப்பகுதியில் தாழ்வாக தொங்கிய மின் கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி சம்பவயிடத்திலேயே பலியானார். இவர் சில நாட்களுக்கு முன் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்வதற்காக மாலை அணிந்திருந்தார். பொதுமக்கள் புகார் முனைவென்றி உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் ஏராளமான மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக தொங்குவதால் விபத்து அபாயம் உள்ளதாக பொது மக்கள் புகார் தெரிவித்திருந்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழிலும் செய்தி வெளியானது. தற்போது மின்கம்பி உரசி முனியசாமி பலியானார். அவருக்கு மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.
1 hour(s) ago
2 hour(s) ago | 10