உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்டுக்கூடு விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

பட்டுக்கூடு விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோடு:ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு, கவுந்தப்பாடி, கோபி, தாளவாடி, தாராபுரம், காங்கேயம் உட்பட பல பகுதியில், 10,000 ஏக்கருக்கு மேல் வெள்ளை பட்டுக்கூடு உற்பத்தியாகிறது.ஜன., முதல் ஜூலை வரை முட்டைக்கூடு தொகுப்பில் வீரியமற்ற புழுக்கள் உருவாகி, வெயில் தாங்காமல், நுாலை உற்பத்தி செய்யாமல் இறந்துவிடுவதாக விவசாயிகள் கவலை அடைந்தனர். இரு மாதங்களாக வெயில் சற்று குறைந்து சீதோஷ்ண நிலை மாற்றத்தாலும், பட்டுப்புழு தரமான வளர்ச்சியாலும், 80 சதவீத அறுவடையை எட்டியதால் விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.தமிழ்நாடு பட்டு விவசாயிகள் சங்க தலைவர் ராஜகோபால் கூறியதாவது:மே - ஜூன் மாதங்களில் ஒரு கிலோ பட்டுக்கூடு, 450 ரூபாய் முதல், 525 ரூபாய் விலையில் தர்மபுரியில் விற்பனையானது. இரு மாதங்களாக சீதோஷ்ண நிலை மாற்றத்தால், நோய் தாக்கமின்றி நன்கு வளர்ச்சி, 80 சதவீதம் வரை உற்பத்தியாகி உள்ளது.இனி வரும் நாட்களிலும் மழைக்காலமாக இருக்கும் என்பதால், இதே நிலை தொடரும் என எதிர்பார்க்கிறோம். தர்மபுரியில், சில நாட்களாகவே ஒரு கிலோ பட்டுக்கூடு, 600 முதல், 700 ரூபாய் விலையில் விற்பனையாகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை