வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Nella.thittam
மேலும் செய்திகள்
வருமானத்தை பெருக்க பல பயிர் சாகுபடி முறை
07-Jun-2025
சென்னை:குறுவை பயிர்களுக்கு, மொத்த சாகுபடி பரப்பில், 50 சதவீதத்தை மட்டும் காப்பீடு செய்ய, வேளாண்துறை முடிவெடுத்து இருப்பது, விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், குறுவை பருவத்தில் 4 லட்சம் ஏக்கரிலும், மற்ற மாவட்டங்களில் 13 லட்சம் ஏக்கர் வரையிலும், நெல் சாகுபடி செய்யப்படுகிறது. சாகுபடி செய்யும் விவசாயிகள், இயற்கை சீற்றங்களால் ஏற்படும் நஷ்டத்தில் இருந்து தப்ப, பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ், பயிர் பாதிப்புக்கு ஏற்ப, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு தமிழக அரசு, குறுவை பயிர்களுக்கு காப்பீடு மானியத்தை வழங்கவில்லை. இதனால், குறுவை பயிர்களுக்கு காப்பீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. பருவநிலை மாற்றத்தால், திடீர் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு, விவசாயிகள் இழப்பீடு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, இம்முறை குறுவை பயிருக்கு காப்பீடு செய்ய, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் போராடினர். இதையடுத்து, குறுவை பயிர்களுக்கு காப்பீடு செய்ய, வேளாண்துறை முடிவு செய்துள்ளது. ஆனால், மொத்த சாகுபடி பரப்பில், 50 சதவீதத்தை மட்டும், காப்பீடு திட்டத்திற்குள் கொண்டு வர, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, டெல்டா மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கர் மட்டுமே காப்பீடு செய்யப்படும். மற்ற மாவட்டங்களில், 6.50 லட்சம் ஏக்கர் காப்பீடு செய்யப்பட உள்ளது. இது விவசாயிகள் மத்தியில், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் முன்பு நீரின்றி வறட்சியால் பயிர்கள் பாதித்த சம்பவம் நடந்தது. ஆனால், பருவநிலை மாற்றம் காரணமாக, கோடையிலும் மழை பெய்கிறது. இதனால், குறுவை பயிர்கள், இரண்டு ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வருகின்றன. எனவே, சாகுபடி செய்யும் அனைத்து பயிர்களையும், காப்பீடு செய்தால் மட்டுமே, பயிர் பாதிக்கும்போது இழப்பீடு கிடைக்கும். ஆனால், இதில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Nella.thittam
07-Jun-2025