மேலும் செய்திகள்
மத்திய அரசின் மானியத்தை வருமானமாக கருத முடியாது
8 minutes ago
வெள்ளி ஒரு கிலோ ரூ.10,000 அதிகரிப்பு
25 minutes ago
கவர்னர் உரைய வாசித்த சபாநாயகர் அப்பாவு இறுதியாக பேசும் போது, 'எங்களுக்கு பெருமளவு நிதி தேவைப்படுகிறது. அதை மத்திய அரசிடம் இருந்து பெற்றுத் தர வேண்டும்' என்று கூறிவிட்டு, சாவர்க்கர், கோட்சே போன்ற வார்த்தைகளை பயன்படுத்தினார். சபையில் இல்லாத மரபை, சபாநாயகர் அறிமுகப்படுத்தி உள்ளார். சபாநாயகர் மரபுப்படி நடக்கவில்லை; கவர்னர் ரவி மரபுப்படி நடந்து கொண்டார். சபாநாயகர் பேச ஆரம்பித்து, மரபை மீறினார். எனவே, கவர்னர் சபையிலிருந்து வெளியேறினார். கவர்னர் பேசியது சபை குறிப்பில் இருக்க வேண்டும். அரசு எழுதிக் கொடுப்பதை, கவர்னர் வாசிப்பது மரபு. அதில் கவர்னர் திருத்தம் செய்யக் கூறியதை செய்யாததாலும், சபை மரபை மீறி சபாநாயகர் பேசியதாலும், கவர்னர் வெளியேறினார். தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்த பின், தேசிய கீதம் இசைப்பதில் தவறில்லை. சபாநாயகர் பேசாமல் இருந்திருந்தால், கவர்னர் முழுமையாக இருந்திருப்பார்.- நயினார் நாகேந்திரன், சட்டசபை பா.ஜ., தலைவர்
8 minutes ago
25 minutes ago