உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பைக் மீது கார் மோதல்: தந்தை, மகன் பலி

பைக் மீது கார் மோதல்: தந்தை, மகன் பலி

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே சாலையை கடக்க முயன்ற பைக் மீது கார் மோதிய விபத்தில் தந்தை, மகன் பலியாகினர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த கொங்கராம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை,54; தி.மு.க., கிளைச் செயலாளர். இவரது மகன் தயானந்த் (எ) தயாநிதி,23. சென்னை ,அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். நேற்று அதிகாலை 5.30 மணிக்கு ஏழுமலை தனது மகன் தயானந்தை சென்னைக்கு ரயிலில் ஏற்றிவிட பைக்கில் விக்கிரவாண்டிக்கு அழைத்து வந்தார். வி.சாலை பகுதியில் உள்ள பைபாஸ் சாலையை கடக்க முயன்ற போது, சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வேகமாக சென்ற 'ஸ்விப்ட்' கார் பைக் மீதுமோதியது.இதில் தந்தை மகன் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.விக்கிரவாண்டி போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிந்துள்ளனர்.சாலை விபத்தில் தந்தை, மகன் இறந்த சம்பவம் கொங்கராம்பூண்டி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை