உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அடுத்தடுத்து அரங்கேறும் கொலைகளால் பீதி; சிவகங்கை அருகே காலியானது நாட்டாகுடி கிராமம்

அடுத்தடுத்து அரங்கேறும் கொலைகளால் பீதி; சிவகங்கை அருகே காலியானது நாட்டாகுடி கிராமம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், நாட்டாகுடி கிராமத்தில் தொடர் கொலைகள், அடிப்படை வசதிகள் இல்லாதது போன்றவற்றால், மக்கள் கிராமத்தை காலி செய்து வெளியூர்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், மாத்துார் ஊராட்சியின் கீழ் நாட்டாகுடி, வேலாங்குளம், இலந்தங்குடி உட்பட ஐந்து கிராமங்கள் உள்ளன. இதில், நாட்டாகுடி கிராமத்தில் ஐந்து தலைமுறைகளாக 150 குடும்பத்தினர் விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்ற தொழில்களில் ஈடுபட்டு வந்தனர். உப்பாற்றில் ஓடும் வெள்ள நீர், நாட்டாகுடி கண்மாயை நிரப்பி செல்வதன் மூலம்,200 ஏக்கரில் விவசாயம் நடைபெற்றது.மேலும், 20 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வறட்சியால், அக்கிராம மக்கள் படிப்படியாக மதுரை, சிவகங்கை போன்ற நகரங்களுக்கு குடியேறினர். எஞ்சிய 50 குடும்பங்கள் தொடர்ந்து வசித்தனர். குடிநீர், ரோடு, தெருவிளக்கு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தருமாறு பலமுறை கோரிக்கை வைத்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.இந்நிலையில், கிராமத்தில் குற்ற சம்பவங்களும் அதிகரிக்க துவங்கின. ஒரு வயது குழந்தையின் கழுத்தை நெரித்து தந்தையே கொலை செய்து உப்பாற்றில் புதைத்தார். கிராம முக்கியஸ்தர் கணேசன் என்பவரை, ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது.ஜூலை 20 மதியம் 1:00 மணிக்கு டூ - வீலரில் வந்த 3 பேர் வீட்டிற்கு முன் அமர்ந்திருந்த விவசாய கூலி தொழிலாளி சோணைமுத்து, 62, என்பவரை கொலை செய்து, தலையை துண்டித்து சிவகங்கை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள கண்மாயில் வீசி சென்றனர்.ஏற்கனவே பல குடும்பங்கள் வெளியேறிய நிலையில், இந்த சம்பவத்தை அடுத்து இருந்த 10 குடும்பமும் கால்நடைகளுடன் பிற நகரங்களுக்கு சென்றுவிட்டனர். அடுத்தடுத்து அரங்கேறிய கொலைகளால் ஒரு கிராமமே காலியானது, சிவகங்கை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சட்டசபை தேர்தல் வரஉள்ளதை அடுத்து, ஆளுங்கட்சிக்கு எதிராக பிரசாரத்தில் நாட்டாகுடி கிராம அவலத்தையும் கையில் எடுக்க எதிர்க் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

தாயை போன்றது சொந்த ஊர்

ஐந்து தலைமுறைகளாக இக்கிராமத்தில் 150 குடும்பங்களை சேர்ந்தவர்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டனர். எந்த வசதியும் இல்லை. சோணைமுத்து கொலைக்கு பின் எல்லோரும் வெளியேறிவிட்டனர். 'பெற்ற தாயை போன்றது சொந்த ஊர்' என்பதால், கடைசி காலத்தில் நான் மட்டுமே என் கிராமத்தை பாதுகாக்கும் நோக்கில் தொடர்ந்து தனியாக வசிக்கிறேன். - தங்கராஜ், 55, நாட்டாகுடி.

விசாரணைக்கு உத்தரவு

நாட்டாகுடி கிராமத்தில் தொடர் கொலைகளால் மக்கள் ஊரை காலி செய்து விட்டு சென்றுள்ளனர். இது குறித்து விசாரித்து அறிக்கை வழங்க எஸ்.பி., சிவபிரசாத்திடம் தெரிவித்து உள்ளேன். நாட்டாகுடி மக்கள் அச்சமின்றி கிராமத்தில் மீண்டும் குடியேறலாம். - பொற்கொடி, சிவகங்கை கலெக்டர்

ரூ.4,835 கோடி ஒதுக்கியும் அவலம்

சிவகங்கை மாவட்டம், நாட்டாகுடி கிராமம் தற்போது 'பேய்' கிராமம் போல் காட்சி அளிக்கிறது. முதல்வர் ஸ்டாலின் கண்காணிப்பின் கீழ் நிர்வாக அக்கறையின்மையின் வெளிப்படையான அடையாளம் இந்த கிராமம். அடிப்படை வசதிகள், சுத்தமான குடிநீர் வசதி இல்லை என, அவர்கள் நீண்டகாலமாக புகார் கூறி வருகின்றனர். நான்கு ஆண்டுகளில், மத்திய அரசு 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்திற்காக தமிழகத்திற்கு, 4,835 கோடி ரூபாய் வரை ஒதுக்கியுள்ளது. ஆனால், குழாய் நீரை பெற போராடும் கிராமங்கள் இன்னும் உள்ளன. நாட்டாகுடி கிராமத்தை உள்ளடக்கிய மாத்துார் ஊராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீத குடிநீர் குழாய் இணைப்பு தந்துள்ளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது நிர்வாக தோல்வி மட்டுமல்ல, துரோகம். - அண்ணாமலை பா.ஜ., முன்னாள் மாநில தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

தமிழ்வேள்
ஆக 06, 2025 20:59

காலியான ஊர், கேட்பாரற்ற சொத்து என்றால் உபீஸ் க்கு கையரிப்பு கன்ட்ரோல் பண்ண முடியாமல் போகும்... இப்போதே ஜி சதுர கம்பெனியை இறக்கிவிடலாமா? என்று விடியலுக்கு தீஈஈஈவிர ஓசனையாமே?....அப்புடியா?


SUBRAMANIAN P
ஆக 06, 2025 14:06

எந்த கொம்பனும் குறை சொல்லமுடியாத ஆட்சி.. இந்த திமுகவுக்கு சொம்படிப்பானுங்களே வேணுகோபாலு, செந்தூரன், இன்னும் சிலர் அறிவாலயத்துல கிளீனிங் வேல செய்யபோயிருக்கானுவோ


krishna
ஆக 06, 2025 14:40

SIR NEENGA VERA IVANUGA THAGUDHIKKU AZHUKKALAYAM ULLA KOODA VIDA MAATAANGA.200 ROOVAA COLIE THOOKI ERIVAANGA.KAVIKITTU ODUVAARGAL.


V RAMASWAMY
ஆக 06, 2025 10:51

எல்லாவற்றிலும் முதன்மையான மாடல் அரசு இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறது?


theruvasagan
ஆக 06, 2025 10:20

கொலை செய்பபட்டவர் குடும்பத்துக்கு ஒரு கோடி நிவாரணமாம். இது என்ன விபத்தா இயற்கை பேரிடரா. யார் அப்பன் வீட்டு பணம். நிவாரணத்தை கொலையாளிகளிடம் இருந்து பறித்து கொடுக்க வேண்டும். கடமை தவறின அதிகார வர்க்கத்தினிடம் இருந்து வசூலித்துக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டல் கட்சி அல்லது சொந்த நிதியிலிருந்து கொடுக்க வேண்டும். வரி கட்டுபவர்கள் ஏமாளிகளா. இவர்கள் கையலாகாத தனத்துக்கு மக்கள் பொறுப்பேற்க வேண்டுமா.


Santhakumar Srinivasalu
ஆக 06, 2025 12:56

மிக சரியான பதிவு! அந்த கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்யாத அரசாங்க அதிகாரிகள் அனைவரும் கோர்ட்டால் தண்டிக்க வேண்டிய குற்றவாளிகள் தான்!


Ganapathy Subramanian
ஆக 06, 2025 10:12

சோனமுத்தா போச்சா? வடிவேலு வசனம் போல விடியா ஆட்சியினர் வசனம் பேச வைக்கவேண்டும் தமிழக மக்கள். சோணமுத்துவின் கொலை அதற்கு தொடக்கமாயிருக்குமா?


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஆக 06, 2025 09:54

கொளத்தூர் போயிட்டு வந்ததுல எல்லா கவலைகளும் மறந்து நாட்டாமைக்கு புத்துணர்ச்சி வந்துடுச்சாம்ல... நாட்டாகுடி ஆளுங்களுக்கு இன்னுமா தெர்ல?


Kjp
ஆக 06, 2025 11:25

மிக மிக மோசமான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது 2026ல் தான் இதற்கு விடிவு பிறக்கும் என்ற நம்பிக்கையில் தான் காலம் ஓடிக் கொண்டிருக்கிறது.


R vn
ஆக 06, 2025 09:51

This is the good example for worst administration worst police department and , worst Goverment . They shoud be punished , because village role Key role for developement of india ..


krishna
ஆக 06, 2025 09:42

UDAN APPA INDHA MUDHIYAVARAI PHONIL KOOPITTU SORRY SOLVAAR.


ஆரூர் ரங்
ஆக 06, 2025 09:25

பெரியவருக்கு போன் பண்ணிட்டு சாரி சொல்வார் முதல்வர். அத்துடன் முடிந்துவிடும்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஆக 06, 2025 09:19

ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இப்போது இருந்தே கணக்கு போட ஆரம்பித்திருக்கும். அரசு இந்த ஊரில் தொழிற்சாலை அமைக்க புரிந்து உணர்வு ஒப்பந்தம் போட்டாலே போதும் ரியல் எஸ்டேட் தொழில் துவங்கி விடலாம்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 06, 2025 12:13

எந்த ஊரா இருந்தாலும் தொழிற்சாலை அமைக்க புரிந்து உணர்வு ஒப்பந்தம் அப்படீங்குறது ஜி ஸ்கொயர் கிளியரன்ஸ் கொடுத்தாத்தான் முடியும்


முக்கிய வீடியோ