உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிதிநிலை அறிக்கை; முத்திரை சின்னம் வெளியிட்டது தமிழக அரசு

நிதிநிலை அறிக்கை; முத்திரை சின்னம் வெளியிட்டது தமிழக அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக அரசின் 2024-25 நிதியாண்டிற்கான பட்ஜெட் நாளை (பிப்.19) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், “தடைகளைத் தாண்டி.. வளர்ச்சியை நோக்கி” எனும் வாசகத்துடன் நிதிநிலை அறிக்கையின் முத்திரைச் சின்னம் வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சராக முதல்முறையாக சட்டசபையில் நாளை நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே எனும் பழமொழிக்கேற்ப முத்திரை சின்னம் வெளியிடப்பட்டுள்ளது. முத்திரை சின்னம் நிதிநிலை அறிக்கையின் வெற்றியை முன்னே முழங்கிடும் முத்து சின்னம். இந்தியப் பொருளாதாரத்தில் உயர்ந்துள்ள முன்னணி மாநிலமாக தமிழக அரசு திகழ்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

vijay
பிப் 19, 2024 13:12

தமிழ்நாடு "1 டிரில்லியன்" பொருளாதாரமாக உயர்ந்துவிட்டது, தமிழகத்தின் கடன்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுவிட்டது என்று யாராச்சும் எழுதிக்கொடுத்தால் கூட நமது மாண்புமிகு முதல்வர் அய்யா அவர்கள் மேடையில் அப்படியே படித்துவிடுவார். அவ்வளோ நல்லவர்.


Rajarajan
பிப் 19, 2024 09:57

அது இருக்கட்டும். தமிழக அரசின் தற்போதைய கடன் சுமை எவ்வளவு, அடுத்த மூன்று ஆண்டுகளில் எவ்வளவு அதிகமாகும், அதை எப்படி திரட்டுவீர்கள், அது தேவையான கடனா, அந்த சுமை யார் தலையில் எவ்வாறு விடியும் என்றெல்லாம் வெள்ளையறிக்கை வெளியிடுங்கள் என்று தான் கேட்கிறோம்.


J.V. Iyer
பிப் 19, 2024 06:03

இவர்கள் மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், போலிவாக்குறுதிகளை அள்ளிவீசி மக்களை அடிமை ஆக்குகிறார்கள். மக்களுக்கு படிப்பறிவு இருந்தால்தானே இந்த உண்மை புரியும்?


Indhuindian
பிப் 19, 2024 05:56

இதுலயும் ஸ்டிக்கர் ஒட்டியாச்சு விக்சீட் பாரத் ன்னா என்ன?அதைத்தான் தமிஷில் ஏஷுதி இருக்காங்க சுயமா சிதைக்க தெரிஞ்சாதானே


Kasimani Baskaran
பிப் 18, 2024 20:10

கவர்னரிடன் எழுத்திக்கொடுத்து தமிழக அரசு மாநிலத்தின் பணவீக்கத்தை குறைத்துவிட்டதாக வாசிக்கச்சொல்லுமளவுக்கு நிபுணர்கள்.


ஆரூர் ரங்
பிப் 18, 2024 19:11

அந்த ஹிந்தி ரூபாய் சின்னம் சிறப்பு????. வாழ்க தமிழ்.


M S RAGHUNATHAN
பிப் 19, 2024 11:32

தமிழக அரசின் முத்திரை அல்லது லோகோ ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் தானே. ஏன் மாற்றப்பட்டது. இது மரபு மீறல் அல்லவா ?


Venkataraman
பிப் 18, 2024 18:40

ஊர் உலகத்தில எல்லாம் கோடிக்கணக்கில் கடன்களை வாங்கி அதில் பாதியை கொள்ளையடிக்கவும்,ஊழல் செய்யவும் வைத்சுக்கொண்டு மீதியை இலவசம் என்ற பெயரில் திமுக தொண்டர்களுக்கு மட்டும் கொடுப்பதற்கு பெயர் அரசு பட்ஜெட் . திமுக ஒழிந்தால்தான் தமிழகம் உருப்படும். இதுவரை இரண்டு அமைச்சர்கள் ஊழலில் சிக்கி சிறைக்கு சென்றார்கள். மற்ற அமைச்சர்களும், பாலு, ராசா போன்றவர்களும் சிறைக்கு புக காத்திருக்கிறார்கள்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி